பாஸ்தா, pasta recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள் :

பாஸ்தா                          –  250 கிராம்

வெங்காயம்                      –  1

பச்சை குடை மிளகாய்         –  பாதி

மஞ்சள் குடை மிளகாய்      –   பாதி

காரட்                            –   1

முட்டை கோஸ்                –    1 கப் அளவு

வெங்காயத் தாள்               –   2 தண்டு

பச்சை மிளகாய்               –    1

நூடுல்ஸ் மசாலா             –    1/2 பேக்கட்

இஞ்சி பூண்டு விழுது         –    1 டீஸ்பூன்

கரம் மசாலா                   –    1 டீஸ்பூன்

உப்பு                              –    தேவைக்கு

எண்ணெய்                       –    1 டேபுள்ஸ்பூன்

செய்முறை:

பாஸ்தாவை 1/2 மணி நேரம் ஊற வச்சுகனும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணிய நல்லா கொதிக்க வச்சுட்டு அதுல கொஞ்சம் உப்பு,1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவச்ச பாஸ்தாவை போட்டு வேக விடுங்க.

10 நிமிஷம் கழிச்சு அடுப்பை அனைச்சுட்டு பாஸ்தாவை நல்ல வடிசுட்டு மறுபடியும் குளிர்ந்த தண்ணீர்ல அலசனும்.அப்புறம் தண்ணி இல்லாம ஓட்ட வடிகட்டிக்கணும்.

இப்போ ஒரு கடாயில் 1 டேபுல்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிடுங்க.நல்லா சூடான பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போக ஃப்ரை பண்ணனும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கணும்.

 வெங்காயம் கால் பாகம் வதங்கின உடனே பொடியா நறுக்கின காய்கறிகளை சேர்த்து வதக்கணும்.

 5 நிமிஷம் கழிச்சு நூடுல்ஸ் மசாலாவை சேர்த்து நல்ல கலந்து விடுங்க.

 இப்போ பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல கிளறனும்.

அப்புறம் பாஸ்தாவை சேர்த்து மசாலா ஈவனா ஓட்டுறது போல கலந்து பாஸ்தா நல்லா சூடகுற வரை  கிளறி விட்டு அடுப்பில இருத்து இறக்கிடுங்க….

 சூடான சுவையான பாஸ்தா தயார்.

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors