பாதுஷா, pathusa padusha recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

மைதா                                    –    கால் கிலோ
சமையல் சோடா         –    அரைத் தேக்கரண்டி
வனஸ்பதி                           –   100 கிராம்
சீனி                                         –    கால் கிலோ

செய்முறை

  • மைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • சீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு வேகவிடவும்.
  • வாணலியின் அளவு, எடுத்துக் கொண்டுள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் எத்தனை போட இயலுமோ அத்தனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மிதமான தீயில் இலேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
  • அதன்மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்
Loading...
Categories: Samayal Tips Tamil, Snacks receipies in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors