பொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல், pongal special javvarisi pongal recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil, pongal recipes in tamil

பொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்

ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 300 கிராம்

வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லி.
நெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – தேவையான அளவு
உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
ஏலக்காய் – 5

ஜவ்வரிசி

செய்முறை :

ஜவ்வரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

வெல்லத்தை நன்றாக தூள் செய்து கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு வேக விடவும்.

ஜ‌‌வ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய், வெல்லம் தட்டிப் போட்டு கிளறவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். அடி‌பி‌டி‌க்காம‌ல் ‌கிள‌றி ‌விடு‌ங்க‌ள்.

ஜ‌‌வ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ரும் போது ‌ரு‌சி‌க்காக ‌சி‌றிது பாலையும், நெய்யையும் ஊற்றவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து பொ‌ங்க‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

அ‌வ்வளவுதா‌ன் ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயா‌ர்.

Loading...
Categories: pongal receipies in tamil

Leave a Reply


Sponsors