இளம் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய பூண்டு மணத்தக்காளி குழம்பு, poondu manathakkali kulambu recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil,pregnancy mothers foods health tips in tamil

பிரசவித்த பெண்கள் பூண்டு மணத்தக்காளி குழம்பை, சாப்பிட தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அத்தகைய சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையானவை: உரித்த பூண்டு – அரை கப், மணத்தக்காளி வற்றல் – 6 டீஸ்பூன், வெல்லம், புளி – சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க: மிளகு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம், தனியா – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும்.

புளியைக் கரைத்து.. உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.

பூண்டு பாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். நன்றாக கொதித்து வரும்போது இறக்கினால் சுவையான பூண்டு மணத்தக்காளி குழம்பு தயார்!

Loading...
Categories: arokiya unavu in tamil, Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors