உருளைக்கிழங்கு மசால், potato masal recipe in tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு                –              4

வெங்காயம்                         –              2

இஞ்சி                                  –              1துண்டு

பூண்டு                                              –              3

மஞ்சள் தூள்                              –              சிறிது

பச்சை மிளகாய்                       –              3

கடலை மாவு                               –              1 தேக்கரண்டி

கொத்தமல்லி                                –              1தேக்கரண்டி

தாளிக்க

கடுகு,உளுத்தம் பருப்பு            –              1தேக்கரண்டி

கடலைப் பருப்பு                            –              1தேக்கரண்டி

முந்திரி                                              –              5

கறிவேப்பிலை                               –              1கொத்து

உப்பு                                      –              சுவைக்கு

எண்ணெய்                         –              பொரிக்க.

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கவும்

கடலை மாவை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,மற்றும   முந்திரி தாளித்துக் கொள்ளவும்

பின்பு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்

வதங்கியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றவும்

மஞ்சள்தூள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்

தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்

மசாலா கெட்டியானதும் நறுக்கிய மல்லித்தளை சேர்க்கவும்

சுவையான உருளைக்கிழங்கு மசால் ரெடி

இது பூரியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors