உருளைக்கிழங்கு பட்டாணி ரெசிபி, potato paddani recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு        –      கால் கிலோ
பச்சை பட்டாணி        –      25 கிராம்
மைதா                  –      ஒரு கப்
கரம் மசாலா தூள்       –      அரை தேக்கரண்டி
எண்ணெய்              –      கால் லிட்டர்
மிளகாய் தூள்          –      ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள்           –      அரை தேக்கரண்டி
சேமியா                –      100 கிராம்
மஞ்சள் தூள்           –      கால் தேக்கரண்டி
சீரகம்                   –      அரைத் தேக்கரண்டி
கடுகு                   –      அரைத் தேக்கரண்டி
உப்பு                    –      தேவையான அளவு
பெருங்காயம்           –      ஒரு சிட்டிகை

செய்முறை

  • உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து நன்கு மசிக்கவும்.
  • இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், மஞ்சள் பொடி, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசையவும்.
  • கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் போடி சேர்த்து பொரிந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
  • கலவையை ஆற வைத்து ஓவல் வடிவத்தில் சிறு சிறு உருண்டைகள் செய்யவும். நடுவில் சிறிய பள்ளம் செய்து வேக வைத்த பட்டாணி 4 அல்லது 5 வைத்து மூடவும்.
  • மைதா மாவை ஒரு கப்பில் போட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.
  • உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து சேமியாவில் ரோல் செய்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
  • சிறிது ஆறியவுடன் உருண்டைகளை இரண்டுத் துண்டுகளாக வெட்டவும்.
  • ஒரு தட்டில் உருண்டைகளை வைத்துச் சுற்றிலும் மல்லித்தழை, வெங்காயத்துண்டுகள், தக்காளித் துண்டுகள் வைத்து அலங்கரிக்கவும்.
Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors