உருளைக் கிழங்கு அரிசி மாவு முறுக்கு, potato raw rice murukku recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 2 கப்

உருளைக் கிழங்கு – 2 (நடுத்தர அளவு)

ஜீரகம் – 1.5 தேக்கரண்டி

காயத் தூள் – ½ தேக்கரண்டி

பட்டர் – 2 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

நீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை

வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

சிறிது நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

அரிசி மவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் ஜீரகம் மற்றும் எள் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

பெருங்காயத் தூள் சேர்க்கவும்

பட்டர் சேர்க்கவும்

அரைத்த உருளைக் கிழங்கு விழுதை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு மெதுவாக நீர் சேர்க்கவும்

மென்மையாக பிசைந்து கொள்ளவும்

பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொள்ளவும்

மாவை அதில் நிரப்பவும்

பின்பு அதன் மூலம் முறுக்கை செய்யவும்

பின்பு முறுக்கை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

பின்பு அதனை எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன் படுத்தவும்

உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி!!!!!!!!!!

Loading...
Categories: சைவம்

Leave a Reply


Sponsors