கர்ப்பமாக இருக்கும்போது இந்த 6 பொருள மட்டும் கையிலயே தொடக்கூடாதாம்… அழகா முக்கியம் குழந்தைதானே முக்கியம்…, pregnant health tips in tamil

பாரபின்

பாரபின் பொதுவாக கிரீம்கள், லோஷன்கள், ஷாம்பூக்கள், பவுண்டேஷன்கள் மற்றும் சோப்புகளில் ஆகியவற்றில் கட்டாயமாக சேர்க்கப்படுகின்ற ஒரு பொருளாகவே மாறிவிட்டது. இவற்றில் உள்ள ரசாயனங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனால் குறைப் பிரசவம், குழந்தை ஏதேனும் குறைகளோடு பிறப்பது போன்ற சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் பாரபின் சேர்க்கப்பட்ட பொருள்களைத் தவிர்த்திடுங்கள். பாரபின் சேர்க்கப்படாத நல்ல தரமான க்ரீம் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். இது கருவின் வளர்ச்சியை பாதிப்பதோடு குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

​அழகுசாதனப் பொருட்கள்

பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அடங்கியிருப்பதால் பிரசவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய்மார்கள் இவற்றைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். இதில் உள்ள ரசாயனங்கள் கர்ப்பகாலத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கக் கூடும். கர்ப்பகாலத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடாத 5 ரசாயனங்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர்ப்பது உங்களுக்கும் உங்களுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.

​வைட்டமின் ஏ சேர்த்தவை

கருவின் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ அத்தியாவசியமானது தான் என்றாலும் அதிகப்படியான வைட்டமின் ஏ குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். விட்டமின் ஏ மூலாதாரங்களான ரெடின் ஏ, ரெடினாய்டு, ரெடினைல் பால்மிடேட் போன்றவை குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை கர்ப்பகாலத்தில் தீவிரமாக தவிர்க்க வேண்டும். விட்டமின் – ஏ அதிகமாக உள்ள உணவுகளை உட்கொள்வதால்கரு வளர்ச்சியில் பிறழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

​ஒயிட்னிங் புராடக்ட்

வெள்ளை நிறத்தின் மீது நம்முடைய மக்களுக்கு தீராத மோகம் ஏற்பட்ட விட்டது. அதனால் தான் மார்க்கெட்டுகளில் கூட ஒயிட்டினிங் புராடக்ட்களின் விற்பனை பல கோடிகளைத் தாண்டி விற்பனை ஆகிறது. ஆனால் அதெல்லாம் சருமத்துக்கு நல்லதா என்ற ஆராய்ச்சியையும் தாண்டி, குறைந்தபட்சம் கர்ப்ப காலத்தில் மட்டுமாவது தவிர்க்கலாம்.

சருமத்தில் கருமையை குறைக்கும் மற்றும் வெண்மையாக்கும் பொருட்கள், சருமத்தை வெண்மையாக்கும் மற்றும் கருமையை குறைக்கும் அழகு சாதனப் பொருட்களில் அடங்கியிருக்கும் ஹைட்ரோகுய்னைன் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அதிகப்படியான ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

​நறுமண எண்ணெய்கள்

நறுமணங்கள் சேர்க்கப்பட்ட எ சன்ஷியல் ஆயில்களை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது. நறுமண எண்ணெய்கள் இயற்கையானதாக இருந்தபோதிலும் கர்ப்பகாலத்தில் அவற்றிலிருந்து விலகி இருக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அவை கர்ப்பகாலத்தில் தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதால்எந்தவொரு நறுமண எண்ணெய்யையும் பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள். மல்லிகை நறுமண எண்ணெய் தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும் அதே சமயத்தில் ரோஸ்மேரி எண்ணெய் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய வேறு சில நறுமண எண்ணெய்கள் சோம்பு, இலவங்கப்பட்டை, கற்பூரம், அதிமதுரம், மரிக்கொழுந்து மற்றும் தவனம் போன்றவையாகும்.

​சன்ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன் லோசன்கள் எப்போதும் பரிந்துரைக்கப் படுகின்ற போதிலும் கூட, சில சன்ஸ்கிரீன் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அவோபென்சோன் மற்றும் ஆக்சிபென்சோன் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியிருக்கிறது. இந்த இரண்டு ரசாயனங்களும் தாயாகவிருக்கும் பெண்களுக்கு அபாயகரமானவை. இந்த ரசாயனங்கள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் என்று ஆய்வுகள் தொடர்புபடுத்துகின்றன. அதனால் கர்ப்ப காலத்தில் இதையும் தவிர்த்திடுங்கள். முடிந்தவரை வெயிலில் போவதைத் தவிர்ப்பதெ நல்லது தான்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors