கருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள், pregnant in three 03 month tips in tamil, pregnancy tips in tamil

கர்ப்பக்காலத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உண்டாகும் மாற்றங்கள் இயல்பானவை ஆனால் அவை அளவுக்கு அதிகமாகும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

கருவுற்ற மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்
பெண்கள் கர்ப்பக்காலத்தில் ஆரோக்கிய ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பதுண்டு. ஆனால் இந்த காலத்தில் இவையெ ல்லாம் சகஜம் தான் என்று பெண்கள் நினைத்துகொள்கிறார்கள். ஆனால் அளவுக்கு மீறிய பிரச்சனைகளை சந்திக்கும் போது தவிர்க்காமல்ல் மருத்துவரை அணுகுவது நல்லது.

கர்ப்பம் தரித்த உடன்

மாதவிடாய் தள்ளி போகும் போது கருவுறுதலை உறுதிப்படுத்துவோம். கரு உறுதியானதும் ஹார்மோன் மாற்றங்களால் உடலில் பல மாற்றங்களை அறியலாம். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை, உமிழ்நீர், தலைசுற்றல், அடிவயிறு வலி, தசைபிடிப்பு போன்றவை இருக்கும் இது கர்ப்பக்காலங்களில் இயல்பானது ஆனால் இவை அளவுக்கு மீறி இருக்கும் போது கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.

கருவின் வளர்ச்சி

கருவுற்ற பிறகு 16 முதல் 20 வாரங்களில் கருவானது அதிக வளர்ச்சியடையும். இந்த காலங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கருவுக்கு உறுப்புகள் 90 சதவீதம் வரையான வளர்ச்சியை இந்தகாலம் செய்கிறது. அப்போது கருவுற்ற பெண் அதிகப்படியான வேலைகளையும், உடலை வருத்தும் பயிற்சிகளையும் செய்யகூடாது. மிதமான பயிற்சி செய்வது நல்லது. அதிலும் பலவீனமானவர்கள் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.

உணவு

இந்தக்கால்த்தில் உணவை சாப்பிட முடியாது. ஆனாலும் மிருதுவாக எளிதாக செரிக்ககூடிய உணவை எடுத்து கொள் ளுங்கள். பால், பழச்சாறுகள், உணவு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். கருவுறுதலுக்கு முன்பு வேறு நோய்க்காக ஏதேனும் சிகிச்சை எடுத்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரிடம் தாங்கள் கரு உறுதலை உறுதிப்படுத்தி எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரைகளை கரு பாதிக்காமல் இருக்க எடுக்க வேண்டும்.

அடிவயிறு வலி

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் அடிவயிற்றில் இலேசான ஒரு வலி இருக்கும். இந்த தருணங்களில் கருப்பை விரிவ டை வது உண்டாகும். அதனால் ஒரு வித உணர்வு உண்டாகும். சிலருக்கு அடிவயிறு வலிக்கும் போது வலியும் தீவிரமாக இருக்கும். அதிக வெள்ளைப்படுதலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீர் பிரிதல்

கருவுற்ற காலங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயல்பானது. கருப்பையும் சிறுநீர்ப்பையும் அடுத்தடுத்து இருப்பதால் கருப்பை விரிவடைந்து சிறுநீர்ப்பையை அழுத்தும் போது சிறுநீர் சிறிதளவு இருந்தாலும் அவற்றை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும்.

ஆனால் இது அதிகளவில் அடக்க முடியாமல் தன்னை மீறி போகும் போது இதுவும் இயல்பானது என்று எடுத்துகொள்ள கூடாது. சிலருக்கு சொட்டு சொட்டாகவும் சிறுநீர் வருவது உண்டு. இது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அல்லது சிறுநீரகத்தொற்றாகவும் இருக்கலாம்.

தலைச்சுற்றல்

கருவுற்ற காலத்தில் தலைச்சுற்றலும், ஒவ்வாமையும் அதிகமாக இருப்பதும் இயல்பானது. ஆனால் நாள் முழுவதும் தலைச்சுற்றலும், வாந்தியும் தொடர்ந்து இருக்கும் போது அவை வேறு காரணங்களாலும் உண்டாகலாம். வாந்தி அதிகமாகும் போது உடலில் போதிய நீர்ச்சத்தில்லாத காரணங்களால் டீஹைட்ரேட் பிரச்சனை கொண்டு வரும்.
இது அதிகரிக்கும் போது உடலில் சோர்வு அதிகமாகும். இது உடலில் பொட்டாசியத்தை அதிகமாக்கி சோடியத்தை குறைக்கவும் வாய்ப்புண்டு. அதிக வாந்தியால் சிலருக்கு நாவறட்சி தாகம் போன்றவை உண்டாகும்.

இரத்தக்கசிவு

இரத்தக்கசிவு கருத்தரிக்கும் போது உண்டாகாது. ஆனால் வெகு சிலருக்கு இரத்தக்கசிவு சிறுநீரில் கலந்து வெளிவந்தாலோ அல்லது சிவப்பு நிறத்தில் அழுக்காக வந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கிருமித்தொற்று

கருவளர்ச்சி காலங்களில் சளி, இருமல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.பெண்கள் உணவில் மட்டுமே கருவின் வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பெற முடியாது என்பதால் மருத்துவரின் ஆலோ ச னையோடு சத்து நிறைந்த மாத்திரைகளையும் எடுத்துகொள்ள வேண்டும்.

மார்பக மாற்றம்
மூன்று மாதங்களை கடந்த பிறகு தான் பெரும்பாலும் மார்பகங்களில் கனமாக இருப்பதை உணரலாம். ஆனால் இது பயப்பட தேவையில்லை தாய்ப்பால் சுரப்புக்கு தயாராகி வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உடல் சோர்வு இயல்பு என்றாலும் நடக்கவே முடியாத அளவுக்கு படபடப்பு, மூச்சு அதிகமாகும் போதும் இதுஇயல்பானது என்று தவிர்க்காமல் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். ஆரம்ப கட்ட பிரச்சனை இவை என்பதால் எளிதாக குணப்படுத்தலாம்.

குறைபாட்டை இயல்பாக நினைக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors