டீன் ஏஜ் பெண்களே உஷார்.. இதை கவனிக்கா விட்டால் கருமுட்டை உருவாவதில் பிரச்சனை…, pregnant tips in tamil, aarokkiya kurippukal in tamil, ladies health tips in tamil, women health tips in tamil

பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள். எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம்பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது. இதற்கு என்ன காரணம்? எதனால் வருகிறது? என்று பார்க்கலாம்.

​பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

பெண்கள் பருவமடையத்தொடங்கும் போது உடலில் ஹார்மோன்கள் சுரக்கும்.இவை தேவையான அளவுக்கு சுரக்க வேண்டும். இந்த நிலை வேறுபடும் போது பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக கருப்பை சம்பந்த பட்ட பிரச்சனைகள். இன்று அதிக பெண்கள் இளவயதில் பூப்படைந்த வுடன் இந்தப் பிரச்சனைக்கு உள்ளாவது அதிகரித்துவருகிறது.

ஹார்மோன் குறைபாட்டில் உண்டாகும் முக்கிய குறைபாடு பி.சி.ஓ.டி பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம். அதாவது அதாவது பெண்கள் கர்ப்பப்பையில் உருவாகும் சிறு சிறுகட்டிகள் தான் சினைப் பையில் நீர்கட்டி.. எந்த வயதிலும் இந்த பிரச்சனைவரலாம் என்றாலும் அதிக அளவு இளம்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​சினைப்பை நீர்கட்டி கட்டிகள் அல்ல

சினைப்பை கட்டிகள் என்றதும் அதுகருப்பை கட்டிகள் என்று முடிவு செய்துகொள்ளும் பெண்கள் உண்டு. ஆனால் இது கட்டிகள் இல்லை. ஹார்மோன் குறைபாடு தான். பூப்படைந்த பெண்களின் உடலில் இரண்டுவகையான ஹார்மோன்கள் சுரக்கும். ஒன்று ஈஸ்ட்ரோஜன், மற்றொன்று புரொ ஜெஸ்டிரான். இதில் மற்றுமொடு ஹர்மோனும் உண்டு.

அது ஆண்ட்ரஜன் ஹார்மோன். இது ஆண்களுக்கு அதிகம் சுரக்கும்.பெண்களுக்கு இவை குறைந்த அளவில் இருக்கும். ஹார்மோன் குறைபாட்டை சந்திக்கும் போது பெண்களுக்கு இந்த ஹார்மோன் அளவுக்கு அதிகமாகி விட்டால்தான் முகத்தில் முடிகள் அதிகமாக தென்படும்.

​பொதுவான அறிகுறி

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறி இருக்கும். உடல் பருமனாக இருந்தால் தான் இந்த பிரச்சனை வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உடல் பருமனில்லாத பெண் களும் இந்தபிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள்.

சிலருக்கு முகத்தில் மீசை, தாடி, முகம் முழுக்க முடிகள் இருக்கும். சிலருக்கு மாதவிடாயில் பிரச் சனை இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும்.சில பெண்களுக்கு மாதவிடாய் வராது. வந்தால் தொடர்ந்து 10 நாட்களுக்கு உதிரபோக்கு இருந்துகொண்டே இருக்கும். வெகு சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இருக்கும் ஆனால் ஸ்கேன் பரிசோதனையில் சினைப்பை கட்டிகள் இருப்பது தெரியும்.

​ஆய்வுகள் சொல்லும் அறிகுறி

உலகளவில் அதிக பெண்கள் இந்த பிரச்சனைக்கு உள்ளாகியிருப்பதை பார்த்தோம். அதே போன்று ஆய்வுகளும் பல பெண்களின் அறிகுறிகள் உடல் நலனில் உண்டாகும் மாற்றங்கள் போன்றவற்றை வைத்து 3 விதமான காரணங்களை உறுதிபடுத்தியுள்ளது. முதலாவது பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் தொடர்ந்து மாற்றம். இடைவிடாத இரத்தபோக்கு, அல்லது மாதவிடாய் வராமல் இருப்பது.

இரண்டாவது ஹார்மோன் பரிசோதனை செய்யும் போது அவற்றில் மாற்றம் இருப்பது. மூன்றாவது ஸ்கேன் பரிசோதனையில் தெரியும் சில மாற்றம் இவை மூன்றும் இருந்தால் சினைப்பையில் பிரச் சனை உண்டு என்பதை உறுதி செய்யலாம்.

​யாருக்கு அதிகம் வரலாம்

இதற்கான காரணங்கள் இதுமட்டும்தான் என்று கண்டறியப்படவில்லை. ஆனால் அறிகுறிகளை வைத்து அந்த குறைபாடுகளை நீக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் அறிகுறிகளை வைத்து அந்த பிரச்சனை ஹார்மோன். உடல் பருமன், மன அழுத்தம் என்று அனைத்து வகை யிலும் சிகிச்சை அளிக்கப்படும்.

குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு யாருக்கேனும் இருந்தாலும் வரலாம். அம்மா, பாட்டி, அத்தை மார்கள் இந்த பிரச்சனையில் இருந்திருந்தாலும் இளைய தலைமுறைகளுக்கு இருக்கலாம். இப்படி பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் பாரம்பரியமான உணவுப்பழக்கங்களைக் கடைபிடித்ததால் அவர்கள் அதிகம் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகாமல் பார்த்துகொண்டார்கள்.

​மன அழுத்தம்

மன அழுத்தத்தால் இந்த பிரச்சனையும் வருமா. வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். இளம் பெண் கள் பூப்படைந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சியை சீராக சந்திப்பார்கள். ஆனால் கல்வி, வேலை என்று வெளியில் வந்துதங்கும் போது இயல்பாக மன அழுத்தம் உண்டாகும்.

இயல்பாக இருக்கும் போது சுழற்சி சீராக இருக்கும். ஆனால் வெளியில் வந்து தங்கும்போது மட்டும் மாதவிடாய் சுழற்சி மாறுபடும். திருமணத்துக்கு பிறகும் இந்த பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் உண்டு.குடும்பத்தில் உண்டாகும் சிறு சிறு பிரச்சனைகளையும் மனதில் கொண்டு உடல் எடை கூடு வதும், உடல் எடை குறைவதும் கூட மன அழுத்தத்தால் உருவாகக்கூடும். ஆக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஹார்மோன் ரீதியாகவும் மாற்றங்கள் உருவாகும் போது இந்த பிரச்சனை உண் டாகிறது.

​கருப்பையில் பாதிப்பு

இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் சிகிச்சை எடுக்காத போது மாதவிடாய் பிரச்சனையை அதிகரிக்கும். மாதவிடாய் சுழற்சி என்பதில் சினைப்பையில் வளரும் முட்டைகள் கருப்பையில் வந்து கருவாக உருவாகாமல் இருக்கும் போது இரத்தமாக மாறி வெளிவருகிறது. இதுதான் முறை யான மாதவிடாய் சுழற்சி.

அதே நேரம் சினைப்பையில் நீர் கட்டிகள் இருந்தால் அது முட்டைகளை வளர்ச்சியைக் குறைக்கும் போது மாதவிடாய் சீரற்று இருக்கும். கருமுட்டைகள் உருவாவதிலும் குறைபாடு இருக்கும். இது திரு மணத்துக்கு பின்னரும் தொடரும் போது கருத்தரிப்பில் பிரச்சனையை உண்டாக்கவும் வாய்ப் புண்டு.

​என்ன தீர்வு

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் சிகிச்சையைப் பற்றி பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த சினைப்பை நீர்கட்டிகள் நீக்கிவிடும் போது மட்டும் இந்த பிரச்சனையை சரிசெய்ய லாம் என்பதில் உண்மை கிடையாது. சினைப்பை நீர்கட்டிகளை நீக்கும் போது கருமுட்டை உற்பத் திக்கான சிகிச்சையும் உடல் ரீதியான ஹார்மோன் சுரப்புகளை சரிசெய்வதிலும் மட்டும் தான் இந்த சினைப்பை நீர்கட்டிகள் வரவிடாமல் தடுக்க முடியும்.

மேற்கண்ட அறிகுறிகளை கண்டதும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. முறையான சிகிச்சை தேவையெனில் லேப்ராஸ்கோப்பி போன்றவற்றை மருத்துவரே பரிந்து ரைப்பார். அதனால் பெண்கள் குறிப்பாக டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரது ஆலோசனை பெறுவது நல்லது என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர் கள்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Maruthuva Kurippugal in Tamil, Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors