பூசணிக்காய் பால் பாயாசம்,pumpkin milk payasam recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பால்                 –        11/2 கப்

பூசணிக்காய்          –        350 கிராம்

நீா்                   –        1 கப்

சர்க்கரை             –        1/2 கப்

ஏலக்காய் தூள்       –        1/8 தேக்கரண்டி

குங்குமப் பூ          –        சிறிது

ஜவ்வரிசி             –        3 மேஜைக்கரண்டி

ரோஸ் வாட்டர்       –        சிறிது

நெய்                 –        2 மேஜைக்கரண்டி

உலர்திராட்சை        –        சிறிது

முந்திரி              –        சிறிது

தேங்காய் துண்டுகள்  –       விரும்பினால்

செய்முறை

பூசணிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

பின்பு அதனை பாதியாக வெட்டிக் கொள்ளவும் பிரஷர் குக்கரில் நீர் சேர்த்து அதன் மீது ஒரு பாத்திரத்தில் பூசணிக்காயை போட்டு குக்கரை மூடவும்

1 விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

பிரஷர் முழுவதும் வெளியேறியதும் பூசணிக்காயை எடுத்து அதன் சதைப்பகுதியை ஒரு கரண்டியால் சுரண்டி எடுத்துக் கொள்ளவும்.

அதனை மிக்சியில் போட்டு அதனுடன் பால், சர்க்கரை, ஏலக்காய், குங்குமப் பூ சேர்க்கவும்.

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவி  நீர் சேர்த்து வேக வைக்கவும்.

ஜவ்வரிசி வெந்து விட்டது

பின்பு அதனுடன் அரைத்த பூசணிக்காய் விழுது மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.

மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். அதே நேரம் நெய்யில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்துக் கொள்ளவும். பாயாசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதனுடன் சேர்க்கவும்.

பூசணிக்காய் பாயாசம் ரெடி!!!

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors