இறால் மீன் குழம்பு, raal fish kulambu curry recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

இறால்                            –      1/2 கிலோ

தேங்காய் பால்                –      1/4 கப்

இஞ்சி, பூண்டு விழுது       –      1 டேபிள் ஸ்பூன்

பெரியவெங்காயம்            –      2

தக்காளி                          –      2

மிளகாய் தூள்                  –      1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள்                    –      1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்                     –      1/2 டீஸ்பூன்

முந்திரி பருப்பு தூள்          –      1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்                 –      2

கறிவேப்பிலை                  –      1 கொத்து

எண்ணெய்                      –      தேவையானது

உப்பு                               –      தேவையான அளவு.

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தக்காளி, மசாலா தூள்கள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்குகிளறி தண்ணீர் விட்டு வேக விடவும். பின்பு அதனுடன் வேக வைத்த இறாலை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாகதேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors