இறால் மசாலா ஃப்ரை, raal masala fry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

இறால்                –        250 – 300 கிராம்

வத்தல் மிளகாய்       –        17-18

இஞ்சி,                –        நறுக்கியது

பூண்டு                –        7-8

நல்ல மிளகு          –        1.5 தேக்கரண்டி

ஜீரகம்                 –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்          –        ½ தேக்கரண்டி

கிராம்பு                –        4-5

ஏலக்காய்              –        2

சர்க்கரை              –        1 மேஜைக்கரண்டி

 புளி                   –        2 எலுமிச்சை அளவு

வினிகர்               –        2.5 மேஜைக்கரண்டி

உப்பு                    –        தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்  –        பொரிக்க

ரவை                  –        ½ கப்

அரிசி மாவு          –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

இறாலைநன்கு கழுவி தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்யவும்

எண்ணெய் மற்றும் வினிகர் தவிர அனைத்து மசாலாக்களையும் நீரில் ஊற வைக்கவும்

சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி 35-40 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்

பின்பு அவற்றை விழுதாக நன்கு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது வினிகர் சேர்த்துக் கொள்ளவும். கலவை கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் மசாலா இறாலில் ஒட்டாது

அரைத்த மசாலாவை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

30 நிமிடம் ஊற வைக்கவும்

பின்பு அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து கலக்கவும்

இறாலினை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்

ஒரு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இறாலை அதில் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும்

சிறிது நேரத்திற்கு பிறகு அதனை திருப்பி வைத்து வேக வைக்கவும்.

இறால் வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors