ரம்ஜான் நேன்பு கஞ்சி, Ramadan nonbu kanji recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பச்சரிசி                        –        ½ கப்

பாசிப் பருப்பு                  –        2 மேஜைக்கரண்டி

காரட்                          –        1

வெங்காயம்                   –        1

தக்காளி                      –        1

 இஞ்சி பூண்டு விழுது          –        1.5 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        ஒரு சிட்டிகை

மிளகாய் தூள்               –        ¼ தேக்கரண்டி

கரம் மசாலா துள்            –        ¼ தேக்கரண்டி

புதினா                       –        ¼ கப்

தேங்காய் பால்               –        ½ கப்

நீர்                          –        3+1/2 கப்

மல்லித்தளை                 –        1 மேஜைக்கரண்டி

உப்பு                          –        தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்       –        2 தேக்கரண்டி

பட்டை                      –        ½ இன்ஞ் துண்டு

சோம்பு                      –        2

ஏலக்காய்                   –        1

பச்சை மிளகாய்             –        1

செய்முறை

பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பை கரகரப்பாக அரைத்து தனியே வைக்கவும்

ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்

இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு தக்காளி, காரட், புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சோ்த்து 2 நிமிடம் வதக்கவும்

பின்பு பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்க்கவும்

பின்பு நீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்

பின்பு அதனை மசித்துக் கொள்ளவும். பின்பு மீண்டும் லேசாக சூடாக்கவும். தேவைப்படால் சிறிது நீர் சேர்க்கவும்

பின்பு தேங்காய் பால் சேர்க்கவும்

பின்பு மல்லித் தளை தூவி இறக்கவும். கஞ்சி ரெடி!!!

Loading...
Categories: ramalan samayal in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors