சளி, இறுமலை நீக்க சிறந்த கசாயம் இது தான்.., sali irumal maruththuva kurippukal in tamil

தற்பொழுது குளிர்காலம் என்பதால் இறுமல், சளி ஆகியவை பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடும். இதனால் சரியாக தூங்க முடியாமல், தங்களது அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமல் மிகவும் அவதி பட வாய்ப்பு உள்ளது. மேலும் சளி அதிகமானால் தலை பாரம் அதிகமாகும். அது உடலுக்கு பெரும் சோர்வை கொடுக்கும்.

இது போன்ற சளி இறுமலுக்கு அரைக் கீரை மிளகு கசாயத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், இதற்கு அரைக்கீரை தண்டு ஒரு கைப்பிடியும், கொஞ்சம் மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் போன்றவையே தேவைப்படும்.

கீரையில் உள்ள தண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, மிளகை தூளாக்கி கொள்ளவும். கீரையின் தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 500 மி.லி. அளவு தண்ணீரை ஊற்றி மிளகு தூளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு, பாதியாக சுண்ட செய்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி இறக்கினால் கசாயம் தயார். இந்த கசாயத்தை சளி, இறுமல் உள்ளவர்கள் பருகினால் விரைவில் குணமாகும் என இயற்கை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors