செட்டிநாடு முட்டை பிரியாணி, seddinaandu egg briyani recipe in tamil cooking tips in tamil, samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

பிரியாணி மசாலாவுக்கு

மேஸ்                        –       1

நட்சத்திர சோம்பு              –      1

பட்டை                       –       1 இஞ்ச் துண்டு

நல்ல மிளகு                  –       10 -15

ஏலக்காய்                     –       3

கிராம்பு                       –       3

ஜீரகம்                        –       1 தேக்கரண்டி

முட்டை தாளிக்க

தேங்காய் எண்ணெய்          –       1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்                –        1 தேக்கரண்டி

ஜீரகத் தூள்                   –       1 தேக்கரண்டி

மல்லி தூள்                   –       1 தேக்கரண்டி

உப்பு                          –       தேவையான அளவு

பிரியாணிக்கு

பாஸ்மதி அரிசி              –        2 கப்

நீர்                          –        3 கப்

முட்டை                     –        8 (வேக வைத்தது)

முந்திரி                      –        20

வெங்காயம்                  –        1

இஞ்சி பண்டு விழுது         –        1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்              –       4

மிளகாய் தூள்                –        1 – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        1/4  தேக்கரண்டி

தயிர்                        –        1/2 கப்

மல்லி தளை                –        1 மேஜைக்கரண்டி

புதினா                      –        1 மேஜைக்கரண்டி

நெய்                        –        1 மேஜைக்கரண்டி

குங்குமப் பூ கலந்த பால்     –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

பிரியாணி மசாலாவுக்கு கொடுக்கப் பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்பு 2 பே லீவ்ஸ் சேர்க்கவும். பொடித்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து  வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு ஒரு இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்.

பின்பு 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்க்கவும்.

சிறிது முந்திரி சேர்க்கவும்.

சிறிது மல்லித் தளை மற்றும் புதினா சேர்க்கவும்.

பின்பு 1/2 கப் தயிர் மற்றும் 3 கப் நீர் சேர்க்கவும் (2 கப் அரிசிக்கு)

பின்பு அரை மணி நேரம் உப்பு சேர்த்து நீரில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

அதே நேரம் வேக வைத்த முட்டைகளை, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் , 1 தேக்கரண்டி ஜீரகத் தூள் , 1 தேக்கரண்டி மல்லித் தூள் சேர்க்கவும். பின்பு உப்பு சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்

அதன் பின் வேக வைத்த முட்டைகளை வைத்து 2 நிமிடங்கள் இருபக்கங்களையும் வேக வைக்கவும்.

அரிசி வெந்ததும் தீயை குறைத்து 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.

2 தேக்கரண்டி குங்குமப் பூ கலந்த பால் சேர்க்கவும்.

பின்பு வேக வைத்து தாளித்த முட்டை சேர்க்கவும்.

மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்.

செட்டிநாடு முட்டை பிரியாணி ரெடி!!!!!

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors