வஞ்சர மீன் ஊறுகாய், seer fish pickle recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

 • வஞ்சிரம் மீன்                –       1/4 கிலோ
 • தக்காளி                           –       1/2 கிலோ
 • சிறிய வெங்காயம்     –    1/2 கிலோ
 • இஞ்சி                –        50 கிராம்
 • பூண்டு                –       50 கிராம்
 • மிளகாய் தூள்          –       தேவைக்கேற்ப
 • மஞ்சள் தூள்           –       1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை         –       3 கொத்து
 • கடுகு                                 –       1 டீஸ்பூன்
 • வெந்தயம்             –       1/2 டீஸ்பூன்
 • நல்லெண்ணெய்        –      1/2 லிட்டர் வரை தேவைப்படும்

செய்முறை:

 • மீன் துண்டுகளில் , மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்து , 1/2 மணி நேரம் கழித்து, பொறித்து எடுத்துக் கொள்ளவும்,
 • பொறித்த மீனின் தோள் , முள்,நீக்கி பொறித்து எடுத்துக் கொள்ளவும்,
 • பிசைந்த மீனை , சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு உதிர பொறித்து எடுக்கவும்,
 • பெரிய வாணலி அல்லது குக்கரில் 1/2 லி நல்லெண்ணெயில் கடுகு வெந்தயம், கறிவேப்பலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு 25 நிமிடங்கள் வரை வதக்கவும்,
 • எண்ணெய் பிரிந்தவுடன் தக்காளி போட்டு 25 நிமிடங்கள் வரை வதக்கவும்,
 • உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது 15 நிமிடங்கள் வதக்கி,
 • எண்ணெய் பிரிந்து வரும் போது மீனைப் போட்டு வதக்கி, 2 ஸ்பூன் வினிகர் ஊற்றவும். தேவைக்கேற்ப வினிகர் அதிகம் சேர்க்கலாம்,
 • நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் போது இறக்கவும்,
 • ஆறிய பின் பாட்டிலில் போட்டு 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
Loading...
Categories: oorugai Recipes In Tamil

Leave a Reply


Sponsors