சுரைக்காய் பொப்பட்லு, suraikkai poppadlu recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

sunsamayal.com  சரககய பபபடல 1

தேவையானபொருள்கள்

சுரைக்காய்                  –      பாதியளவு

மைதா                       –      1கப்

நெய்                         –      100கிராம்

உப்பு                          –      தேவையானஅளவு

சரக்கரை                    –      1கப்

ஏலக்காயதுள்              –     சிறிதளவு

பால்                         –      அரைகப்

கேசரி பவுடர்               –      ஒரு சிட்டிகை

செய்முறை

பாத்திரத்தில் மைதாவைக் கொட்டி தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு  சப்பாத்தி மாவுபதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள்.

சுரைக்காயை துருவிக்கொள்ளுங்கள். ஒருகடாயை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி காய்ந்ததும்  சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்குங்கள். சுருண்டு வதங்கியதும் பாலைசேர்த்து மென்மையாக வேகும்வரை கொதிக்க விடுங்கள்.

பிறகு அதில் கேசரி பவுடர் சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். கலவை கெட்டியாக வந்ததும் மீதியிருக்கும் நெய் மற்றும் ஏலக்காய் துள் சேர்த்து கிளறி இறக்கி வைத்துகொள்ளுங்கள்.

பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை எலுமிச்சம்ம்பழம் சைஸீக்கு சிறு உருண்டைகளாக உருட்டிகொள்ளுங்கள். பிறகு அந்த உருண்டையை சப்பாத்திக்குத் தேய்ப்பதுபோல தேய்த்து நடுவே ஒரு ஸ்புன் சுரைக்காய் கலவையை வைத்து நான்குபுறவும் மடித்து மீண்டும் ஒரு முறை லேசாக தேய்த்து தோசைக்கல்லில்  போட்டு  நேய்வட்டு இருபுறவும் சிவக்க வேகவைத்து எடுங்கள் .

இப்போது சுவையான ஆந்திர ஸ்பெஷல் சொரக்காய பொப்பட்லுரெடி.!!!

Loading...
Categories: Dosai recipes in tamil, Parotta Recipe In Tamil

Leave a Reply


Sponsors