சுரைக்காய் புளி குழம்பு, suraikkai puli kulambu curry recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

சுரைக்காய்                –        3 கப்

சின்ன வெங்காயம்        –        10

பூண்டு                     –        6 பற்கள்

தேங்காய் எண்ணெய்      –        1 மேஜைக்கரண்டி

புளிக் குழம்பு தூள்          –       2 மேஜைக்கரண்டி

புளி                        –        3 – 4 மேஜைக்கரண்டி

நீர்                         –        2 கப்

உப்பு                       –        தேவையான அளவு

சர்க்கரை                   –        தேவையான அளவு

தாளிக்க

கடுகு                      –        1 தேக்கரண்டி

ஜீரகம்                     –        1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு           –        1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள்         –        1/4 தேக்கரண்டி

கறி வேப்பிலை            –        ஒரு கொத்து

செய்முறை

சுரைக்காயை எடுத்து பாதியாக வெட்டிக் கொள்ளவும். தேவையற்ற பகுதிகளை நீக்கி விடவும்

சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

சாம்பார் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும்.

1 நிமிடம் வதக்கவும்

பின்பு சுரைக்காய் சேர்க்கவும்.

5 நிமிடங்கள் வதக்கவும்

பின்பு புளித் தண்ணீர் சேர்க்கவும்.

புளிக் குழம்புத்தூள் சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

நன்கு கலக்கி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

சுரைக்காய் புளிக் குழம்பு ரெடி!!!

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal

Leave a Reply


Sponsors