10 வயசு கம்மியா தெரியணுமா.. இதை ட்ரை பண்ணுங்க..ரிசல்ட் சூப்பரா இருக்கும்.., tamil alaku kurippukal in tamil, tamil beauty tips in tamil

ஐம்பது வயதுக்கு பிறகு வந்த சரும சுருக்கங்கள் இப்போது இளவயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு காரணம் சரும பராமரிப்பு இல்லாத தால் தான் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள். சிறுவயது முதல் உரிய முறையில் சருமத்தை பராமரித்தால் உங்கள் வயதை 10 வயதாக குறைத்து சருமத்தை சுருக்கமில்லாமல் காண்பிக்கும் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். இதற்கு அதிகம் மெனக்கெடவும் தேவையில்லை என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு என்ன தேவை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?

​இளவயதில் சரும சுருக்கங்கள்

இன்று இளவயதிலேயே ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சரும சுருக்கங் கள் வருகிறது. முகத்தில் என்னமாதிரியான மேக்கப் செய்தாலும் அவை பளீரென்று தெரியும் அள வுக்கு உண்டு. இன்னும் சிலருக்கு கைகளி, விரல்களில் சுருக்கங்கள் நன்றாகவே தெரியும்.

இளவயதிலும் முதிர்வு தோற்றம் தெரிகிறது என்று கவலைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதி கரித்துதான் வருகிறது. இதற்கு மன அழுத்தம் ஒருபுறம் காரணம் என்று சொன்னாலும் உரிய பராமரிப்பை தோல் பகுதிக்கு கொடுக்கும் போது நிச்சயம் நம் வயதை குறைத்து காட்டமுடியும். அந்த வகையில் நாம் என்னென்னெ பயன்படுத்துகிறோம். எப்படி பயன்படுத்துகிறோம். பார்க்க லாமா?

காரணம்

ஒருபுறம் பராமரிப்பின்மை இன்மை என்ற காரனம் இருந்தாலும் வயது அதிகமாகும் போது சருமத்தில் கொலாஜன் குறைபாடு உண்டாகிறது. கொலாஜன் என்பது ஒரு வகையான புரதம். இவை சருமங்களில் அதிகமாக இருப்பதோடு சருமத்துக்கு பொலிவையும் பளபளப்பையும் தருகிறது. இவை உடலில் எலும்பு மூட்டுகளிலும், செரிமான பாதையிலும் உற்பத்தியாகிறது. இவை சீராக உற்பத்தி ஆகும் வரையில் சருமத்தில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. சருமம் மிருதுவாக, மென்மையாக தேவையான ஈரப்பதத்துடன் இறுக்கமாக இருக்கும். இவை குறையும் போது சருமத்தில் சுருக்கங்கள், தளர்வுகள், முகத்தில் கோடுகள் தெரிய தொடங்கும். இதை சரிசெய்ய உணவு பழக்கத்துடன், சருமத்துக்கு பராமரிப்பும் வேண்டும்.

​என்ன செய்யலாம்

அன்னாசிப்பூ இவை கடைகளில் கிடைக்கும். இவை வாசனைக்காக பிரியாணி மற்றும் மசாலா சேர்த்த உணவில் அதிகம் பயன்படுத்துவது உண்டு. இந்த அன்னாசிபூ எல்லா கடைகளிலும் கிடைக் கும். இந்ந்த அன்னாசி பூவை வாங்கி கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் பொடித்து கொள்ளுங்கள். பொடியாக இருக்க வேண்டியதில்லை. ஓரளவு பொடித்தால் போதும்.

மாவு அரிசி என்று சொல்லக்கூடிய அரிசியை ஒரு தம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளுங்கள். இதை ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் விடுங்கள். குறைந்தது 6 மணி நேரம் வரை இவை ஊறட்டும். நமக்கு இந்த நீர் பால் போல் வெள்ளையாக வரவேண்டும் என்பதால் இதை வெளியில் வைக்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிரவிடுங்கள். க்ளிசரின் சரும சுருக்கத்தை போக்கி வறட்சியையும் போக்கும். இதனோடு ஆலிவ் ஆயில்/ வைட்டமின் இ ஆயில்/ நறுமண எண்ணெய் எடுத்துகொள்ளுங்கள்.

தயாரிக்கலாமா

ஃப்ர்ட்ஜில் குளிரவைத்த அரிசி கழுவிய நீரை வடிகட்டி அகன்ற அடிகனமான வாணலியில் ஊற்றி அதனுடன் ஒரு கைப்பிடி பொடித்த அன்னாசி சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு இறக்கி வைத்து அதை மெல்லிய துணியில் வடிகட்டி அதை நன்றாக குளிரவையுங்கள். அவை ஆறியதும் க்ளிசரின் 50 மில்லியும், நறுமண எண்ணெய் 25 மில்லியும் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதை ஒரு கண்ணாடி ஸ்ப்ரே பாட்டிலில் கலந்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிடுங்கள். இவை மூன்று மாத காலம் வரை கெடாமல் இருக்கும். எப்போதும் அழகு குறித்த பொருள்கள் அனைத்தையும் கண்ணாடி பாட்டிலில் வைத்தால் அதன் பயன் முழுமையாக பெறலாம்.

​எப்போது பயன்படுத்தலாம்

ஆண்கள், பெண்கள் அனைவரும் இந்த ஸ்ப்ரேவை எப்போதும் பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு 7 அல்லது 8 முறை கூட பயன்படுத்தலாம். எப்போதெல்லாம் முகத்தில் ஒரு சோர்வு தென்படுகிறதோ அப்போதெல்லாம் இதை அடித்துகொள்ளுங்கள். ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொண்டு முகத்துக்கு நேராக வைத்து முகம் கழுத்து முழுக்க ஸ்ப்ரே செய்யுங்கள். ஸ்ப்ரே வேகமாக செய்யும் போது முகத்தில் சுருக்கங்கள் தடுக்கப்படும். வளரும் பருவத்திலிருந்தே இதை பயன்படுத்திவந்தால் ஐம்பது வரை கடந்தாலும் முகத்தில் சோர்வு, சுருக்கங்கள் தென்படாது.

ஸ்ப்ரே செய்து முடித்ததும் முகத்தை துடைக்காமல் சிறிது நேரம் கழித்து மெல்லிய துணியில் இலே சாக துடைத்து எடுங்கள். இவை உங்கள் மீது ஒருவித நறுமணத்தை உண்டாக்கும். புத்துணர்ச்சி யாக வைக்கும். அதிகபட்சம் உங்கள் சருமத்தை சுருக்கமில்லாமல் இளமையாக வைத்திருக்க உதவும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors