சுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி!, tasty raal milaku varuval recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையானவை: இறால்- கால் கிலோ, பூண்டு(பொடியாக நறுக்கியது)- 6 பல், பச்சை மிளகாய்-3, மிளகு 15, கறிவேப்பிலை- சிறிதளவு, சீரகத்தூள், மஞ்சள்தூள்- தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.


செய்முறை: 
சுத்தம் செய்த இறாலுடன், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். இறாலில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. இறால் நன்றாக வெந்ததும் மிளகை ஒன்றிரண்டாக பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.

குறிப்பு: இறால் வாயுத் தொல்லையைத் தரும். அதனால் சிறிய அளவிலான இறால்களையே வாங்கவேண்டும். அதுவும் மழைமெதுவாக பெய்திருக்கும் அந்த நேரத்தில் பிடிக்கப்படும் பொடி இறால்களையே வாங்க வேண்டும்.)

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors