சுவை ஊத்தப்பம் வகைகள், tasty uththappam varieties recipes in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தக்காளிஊத்தப்பம் 

சிறிதுஎண்ணெயில்பொடியாகநறுக்கியவெங்காயம், தக்காளி, உப்பு, சிறிது மிளகாய்தூள் சேர்த்து நன்கு சுருளவதக்கவும். அரைக்காமல்அப்படியேஊத்தப்பமாவில் கலந்து குட்டிக்குட்டி ஊத்தப்பங்களாக வார்க்கவும்.

பாலக்ஊத்தப்பம் 

பாலக்கீரையை கழுவி,  பொடியாகநறுக்கி,  ஆவியில் வேகவைத்து தேவையானஉப்பு,  மிளகுதூள்,  சீரகத்தூள் சேர்த்து மசிக்கவும். அதைமாவில் கலந்து ஊத்தப்பங்களாக வார்க்கவும்.

தேங்காய்ஊத்தப்பம் 

சிறிது எண்ணெயில் கடுகு,  பொடியாகநறுக்கிய இஞ்சி,  பச்சைமிளகாய் தாளித்து தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து,  மாவில்கொட்டி,  ஊத்தப்பங்களாகவார்க்கவும்.   மேலே சிறிது தேங்காய்த்துருவலும்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லியும் தூவவும்.

கேரட்ஊத்தப்பம் 

எண்ணெயில் கடுகு,  பொடியாகநறுக்கிய இஞ்சி,  பச்சைமிளகாய் சேர்த்துத்தாளித்து,  கேரட்துருவலை ஒரேபிரட்டுபிரட்டி, உடனே அடுப்பை அணைத்துமாவில் கலந்து ஊத்தப்பங்களாகவார்க்கவும்.  மேலேயும் சிறிது கேரட்துருவல் தூவவும்.

 பொடிஊத்தப்பம் 

ஊத்தப்பமாக ஊற்றியதும்,  ஒருபகுதியில் மட்டும் இட்லிப்பொடியை நன்குதூவி, அழுத்திவிட்டு, வெந்ததும் பரிமாறவும்

Loading...
Categories: appam recipes in tamil

Leave a Reply


Sponsors