திண்டுக்கல் தலப்பாகட்டு சிக்கன் பிரியாணி, thalappakaddi chicken briyani recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

நெய்                         –       2 மேஜைக்கரண்டி

எண்ணெய்                   –       3 மேஜைக்கரண்டி

பாஸ்மதி அரிசி               –       2 கப்

வெங்காயம்                  –       1

பச்சை மிளகாய்              –       3

இஞ்சி பூண்டு விழுது         –       3 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்               –       2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                 –       1 தேக்கரண்டி

மல்லி தளை                –       1/2 கப்

புதினா இலை               –       1/2 கப்

கெட்டித் தேங்காய் பால்      –       1 கப்

நீர்                          –       2 கப்

உப்பு                        –       தேவையான அளவு

ஊற வைக்க

சிக்கன்                      –       500 கிராம்

கெட்டித் தயிர்               –       1 கப்

மிளகாய் தூள்               –       1 தேக்கரண்டி

உப்பு                        –       தேவையான அளவு

சோம்பு                      –       1.5 மேஜைக்கரண்டி

பட்டை                      –       2 சிறிய துண்டு

ஏலக்காய்                   –       4

நட்சத்திர சோம்பு            –       1

கிராம்பு                     –       4

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் தயிர் சேர்க்கவும்.

உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

நன்கு கலக்கவும்.

மசாலா பொருட்களை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்.

நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

வெங்காயம் லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பிரியாணி மசாலா தூள் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

சிக்கன் சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

பின்பு மூடி வைத்து வேக வைக்கவும்

சிக்கன் பாதியளவு வெந்து விட்டது

பின்பு அதனை பிரஷர் குக்கரில் வைக்கவும்

அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்

ஊற வைத்து வடிகட்டிய அரிசி சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

பின்பு அரசியை சிக்கனுடன் சேர்க்கவும்.

புதினா மற்றும் மல்லித் தளை சேர்க்கவும்.

தேங்காய் பால் சேர்க்கவும்.

நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்.

உப்பு சேர்க்கவும்.

கொதிக்க வைக்கவும்.

மூடி வைத்து வேக வைக்கவும்.

அரிசி வெந்து விட்டது

திண்டுக்கல் தலப்பாகட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!!

Loading...
Categories: fish curry recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors