தோசை ரெசிபி, thosai recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி              –        1 கப்

இட்லி அரிசி              –              1 கப்

உளுத்தம் பருப்பு          –              1/2 கப்

துவரம் பருப்பு             –              3 தேக்கரண்டி

கொண்டைக் கடலை      –              3 தேக்கரண்டி

அவல்                    –              1/4 கப்

உப்பு                      –        தேவையான அளவு

செய்முறை

உப்பு தவிர மீதமுள்ள அனைத்தையும் 3 முறை நீரில் அலசி சுத்தம் செய்து அவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அவற்றை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.நன்கு மென்மையாக அரைக்க தேவையில்லை. நீரை கவனமாக சேர்க்கவும்.

பின்பு அதனை ஒரு இரவு முழுவதும் மூடி வைக்கவும். கலையில் அதனை எடுத்து தோசை செய்யலாம். மாவு கெட்டியாகி இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்

பின்பு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின்பு 2 கரண்டி மாவை அதில் விடவும். அதனை தவாவின் மீது நன்கு பரப்பி வைக்கவும். பின்பு அதன் மீது சிறிது எண்ணெய் தெளிக்கவும். தோசை பொன்னிறமாகும் வரை வைத்து பின்பு எடுக்கவும். திருப்பி போட தேவையில்லை.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors