தக்காளி கார தோசை, tomato chilli hot dosai recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருட்கள்

பச்சரிசி                  –      ஒன்றே கால் கப்

உளுந்து                 –      4 டீஸ்பூன்

தக்காளி                      –      4

தேங்காய்    துருவல்     –      2 டீஸ்பூன்

சீரகம்                    –      1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்             –      10

காயத் தூள்                –      பாதி சுண்டைக்காய் அளவு

உப்பு                      –      தேவைக்கேற்ப

எண்ணெய்               –      தேவையான அளவு

 

செய்முறை

பச்சரிசியையும், உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை  சிறிய துண்டுகளாக நறுக்கவும். சீரகம், பெருங்காயம், ஊறிய மிளகாய் ஆகியவற்றை முதலில் அரைத்துக் கொண்டு, பின்னர்

பச்சரிசி, தேங்காய், உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைபட்டதும் தக்காளியையும் போட்டு நன்றாக ஆட்டவும். பின்னர் உப்பு சேர்த்து, அனைத்தையும் கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

கலர்ஃபுல்லாக கண்ணைப் பறிக்கும் இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி

மேலும் சுவை கூட்டும்.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors