வாழை மீன் கருவாடு குழம்பு, vala meen dry fish karuvadu kulambu recipe in tamil, tamil cooking tips in tamil, tamil samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

வாழை மீன் கருவாடு         –        10 – 12 துண்டுகள்

 புளி  கலவை                 –        ¼ கப்

மிளகாய் தூள்                –        2 தேக்கரண்டி

மல்லித் தூள்                 –        2 தேக்கரண்டி

ஜீரகம்  தூள்                  –       1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        ¼ தேக்கரண்டி

வேக வைத்த பீன்ஸ்          –        50 கிராம்

முருங்கை காய்              –        ½ கப் (நறுக்கியது)

கத்தரிக்காய்                 –        ½ கப் (நறுக்கியது)

நல்லெண்ணெய்              –        2-3 மேஜைக்கரண்டி

கடுகு,                       –       ¼தேக்கரண்டி

ஜீரகம்                       –        ½ தேக்கரண்டி

வெந்தயம்                  –       1 தேக்கரண்டி

கறிவேப்பிலை ,              –        6 – 8

வெங்காயம்                 –        1(நறுக்கியது)

தக்காளி                     –        2(நறுக்கியது)

பூண்டு                      –        8 பற்கள்

தேங்காய் பால்              –        ½ கப்

உப்பு                          –        தேயைான அளவு

செய்முறை

கருவாடு துண்டுகளை நன்கு கழுவி சூடான நீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு அதனை எடுத்த மீண்டும் நன்கு கழுவி தனியே வைக்கவும்

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி அதனுடன் புளிக்கலவை, மிளகாய் தூள், மல்லித் தூள், ஜீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

வேக வைத்த பீன்ஸ், நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காயை தயாராக வைத்துக் கொள்ளவும்

ஒரு அடி கனமான பானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஜீரகம், மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும்

பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு பூண்டு சேர்த்து கிளறவும்

தக்காளி சேர்த்து மசியும் வரை நன்கு கிளறவும்

பின்பு நறுக்கிய வேக வைத்த பீன்ஸ், நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதனுடன் புளி மற்றும் மசாலா கலவை சேர்க்கவும்

அதனை மிதமான தீயில் 5 நிமிடம் அதனை கொதிக்க விடவும்

சில நிமிடம் சிம்மில் வைக்கவும்

அதன் பின் கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை மூடி வைத்து 6-8 நிமிடம் வேக வைக்கவும். கலவை லேசாக கெட்டியாகும் வரை வேக வைக்கவும்

இப்போது தீயை அணைத்து விடவும்

கருவாடு குழம்பு ரெடி!!!

பின்பு விருப்பம் இருந்தால் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கவும்

Loading...
Categories: fish curry recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors