வரகு இட்லி, varaku idli recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு    –        1 கப்

வரகு               –        1 கப்

வெந்தயம்          –        1 தேக்கரண்டி

உப்பு               –        துவையான அளவு.

செய்முறை

உழுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் வரகினை எடுத்துக் கொள்ளவும்

நன்கு கழுவி சிறிது நேரம் தனித்தனியே ஊற வைக்கவும்

பின்பு உழுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை எடுத்து மிக்சியில் போட்டு நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

அதனை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

பின்பு வரகினை மிக்சியில் போட்டு நீா் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

அதனையும் அதே பாத்திரத்தில் ஊற்றி 12-15 மணிநேரங்கள் தனியே வைக்கவும்.

பின்பு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

இட்லி தட்டுகளை எடுத்து அதில் அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்

பின்பு கரண்டியில் மாவினை எடுத்து இட்லி தட்டில் உள்ள அனைத்து குழிகளிலும் ஊற்றவும்

பின்பு அவற்றை இட்லி குக்கரில் வைத்து வேக வைக்கவும்

இட்லி வெந்ததும் அதனை இறக்கி ஒரு கரண்டியை நீரில் நனைத்து பின்பு அதன்மூலம் இட்லிகளை எடுத்து வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்

இட்லி ரெடி

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors