வெஜ் சாஸ் பாஸ்தா, veg chase pastha recipe in tamil, tamil cooking tips in tamil, samayal kurippu in tamil

தேவையான பொருள்கள்

வேகவைத்த பாஸ்தா                      –           1 கப்

தக்காளி சாஸ்                                           –           2 மேசைக்கரண்டி

வெள்ளை சாஸ்                                        –           2 மேசைக்கரண்டி

கிரீம்                                                                –           1 டேபிள் ஸ்பூன்

காய்கறிகள்                                       –           1/2 கப்

(காரட், பீன்ஸ்மஷ்ரூம் விருப்பத்துக்கு ஏற்ப)

தேங்காய் எண்ணெய்                    –            தாளிக்க

செய்முறை:

*பாஸ்தாவை சுடு தண்ணீரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.

*வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் சேர்த்தால் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

*வெள்ளை சாசுக்கு, மைதாவை வெண்ணையில் நன்கு அடித்து, பால் கொதிக்க வைத்து திக்கான பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

*தக்காளி சாசுக்கு தக்காளியை தண்ணீரில் கொதிக்க வைத்து தோலுரித்து நன்கு அடித்து வடிகட்டி மறுபடியும் கொதிக்க வைக்கவும். திக்கான பதம் வந்ததும் தனியே வைக்கவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் காய்கறிகளை நன்கு வதக்கி அதனுடன் தக்காளி சாஸ், வெள்ளை சாஸ், கிரீம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*பிறகு அதனை வேகவைத்த பாஸ்தா மேல் ஊற்றி வெள்ளரி, தக்காளி கொண்டு அலங்கரித்து சாப்பிடவும்.

*இப்போது சுவையான வெஜ் சாஸ் பாஸ்தா   ரெடி.!!!!!!!!!!!!!!!

Loading...
Categories: pizza recipe in tamil

Leave a Reply


Sponsors