வெஜிடபிள் பிரியாணி, vegetable briyani recipes in tamil, cooking tips in tamil, samayal kurippukal in tamil

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி               –        11/2

நீர்                           –        3 கப்

எலுமிச்சை சாறு             –        1 மேஜைக்கரண்டி

வெங்காயம்                  –        2 நடுத்தர அளவு

பச்சை மிளகாய்              –        2

இஞ்சி பூண்டு விழுது         –        11/2 தேக்கரண்டி

தக்காளி                      –        1

உப்பு                         –        தேவையான அளவு

புதினா                       –        கைபிடியளவு

மல்லி தளை               –        2 மேஜைக்கரண்டி

காரட்                       –        1

பீன்ஸ்                      –        6-8

காலிஃப்ளவர்                –        10 – 12 சிறிய பூக்கள்

பட்டாணி                   –       1/3 கப்

குடைமிளகாய்             –        1/3 கப்

மசாலா தூள்

மிளகாய் தூள்              –        3/4 தேக்கரண்டி

மல்லி தூள்               –        1 தேக்கரண்டி

பிரியாணி மசாலா          –       2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்              –        1/4 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்                 –        2 மேஜைக்கரண்டி

நெய்                      –        1 மேஜைக்கரண்டி

கிராம்பு                    –        4-5

பட்டை                    –        2

ஏலக்காய்                  –        2

பிரியாணி இலை           –        1

கல் பாசி                   –        1-2

சோம்பு                    –        1 தேக்கரண்டி

அழகு படுத்த

மல்லி தளை             –        1 மேஜைக்கரண்டி

நெய்                      –        1-2 தேக்கரண்டி

முந்திரி                   –        6

தயாரித்தல்

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்பு வடிகட்டி தனியே வைக்கவும்

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரில் 4-5 நிமிடம் வைக்கவும். பின்பு வடிகட்டி தனியே வைக்கவும். காரட் மற்றும் பீன்ஸை சிறிய துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்

பட்டாணியை மற்றும் காரட்டை வேக வைத்து தனியே வைக்கவும்.

செய்முறை

பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். தளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். சிறிது நேரம் வதக்கவும்.

பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

பச்சை வாசம் போகும் வரை கிளறவும்

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

சில விநாடிகள் வதக்கவும்

மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் , உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்க்கவும்

தக்காளி மசியும் வரை மற்றும் மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை கிளறவும்

பாதியளவு புதினா மற்றும் மல்லித் தளை சேர்க்கவும்.

அனைத்து கய்களையும் சேர்க்கவும்.

நன்கு கிளறவும் மற்றும் 2-3 நிமிடங்கள் வதக்கவும்

பின்பு பாஸ்மதி அரிசி சேர்க்கவும்.

நன்கு கிளறவும்

3 கப் நீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சுவையை சரிபார்த்து உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

பின்பு மீதமுள்ள புதினா மற்றம் பாதியளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்.

தண்ணீா கொதிக் தொடங்கியதும் தீயை குறைத்து குக்கரை மூடி வைக்கவும்.

குறைந்த தீயில் 5-6 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு 5 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து கரண்டியால் கிளறவும்

பின்பு கடாயில் 1-2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக பொரிக்கவும்.

பின்பு அதனை பிரியாணியுடன் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு மீதமுள்ள மல்லித் தளை சேர்க்கவும்.

வெஜிடபிள் பிரியாணி ரெடி!!!!

Loading...
Categories: Biryani Recipes Tamil, சைவம்

Leave a Reply


Sponsors