பீட்ரூட் பிரியரா நீங்க? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்

பல சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் பீட்ரூட். ஆனால்  பீட்ரூட்டை அதிகம் உணவில் சுர்த்துக் கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அது பற்றி பார்க்கலாம்.

சிறுநீரின் நிறத்தை இது மாற்றுகிறது, இரும்பு சத்து குறைவாக ள்ளவர்களுக்கு எளிதில் பீட்டூரியாவை ஏற்படுத்துகிறது, இது ஆபத்தான நோயாக இல்லாமல் இருந்தாலும் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது.

இதில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் ருவாகலாம், ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.

சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல், குரல் வளையத்தில் சுருக்கம் போன்றவை வரலாம்,

இதிலுள்ள நைட்ரேட்டுகள், ரத்த நாளங்களை நீர்த்து போக செய்த ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் ரத்த அழுத்தம் திடீரென குறைய வாய்ப்புகள் அதிகம்.

இரைப்பை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், கல்லீரல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

குடல் இயக்கங்களை இது பாதிப்பதால் மலச்சிக்கல் வயிற்றுப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது, இதுதவிர ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கச் செய்யும்.

கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors