வெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்

அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலும் சுத்தம் ஆகிவிடும். அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.

தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடல் ரோக்கியமாக

மேலும், உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் கலந்து குடிக்கக்கூடிய 7 பொருட்களை பற்றியும், அவற்றை குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் பார்க்கலாம்.

ஓமம்

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஓற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.

சீரகம்

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த நீர் அனைவருக்கும் மிக நல்லது. ஏனென்றால், இது குடிப்பதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

பார்லி

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து 1 டம்ளராகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலை எழுந்து வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடலில் சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி விதை கலந்த நீர் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த மிகவும் உதவும்.

வெந்தயம்

இரவு படுக்கும் முன்பு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு தூங்குங்கள். காலை எழுந்ததும் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

அருகம்புல்

தண்ணீர் அல்லது ஜூஸ் ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

உருளைக்கிழங்கு

சில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க, உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors