இந்த உணவு பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் 0ஆபத்தாம், what food are in fridge tips in tamil

தற்போதைய காலத்தில் உள்ளவர்கள் அதிகமாக ப்ரிட்ஜை பயன்படுத்தி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்ன உணவாக இருந்தாலும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஆனால் அது தவறான ஒரு பழக்கம் எல்லா உணவு பொருட்களும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட உகந்தது அல்ல.

வாழைப்பழத்தினை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் ஏற்படும் குளிர்ச்சி சத்தினை கெடுப்பதோடு, அழுகவும் ஆரம்பித்துவிடுமாம்.

அவகோடா காயாக இருந்தால் அதை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாதாம். பழுத்த பழத்தினை அல்லது ஏற்கெனவே வெட்டி மீதம் இருப்பதை வைக்கலாமாம்.

வெங்காயத்தினை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டுமாம். ஏனெனில் இதனால் ஏற்படும் ஈரப்பதம் வெங்காயத்தினை மென்மையாக்கி பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்துவதுடன், இதன் வாசனை மற்ற உணவுப்பொருட்களிலும் இதன் வாசனை பரவிவிடும். பூண்டை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ரப்பர் போன்று மாறிவிடுமாம்.

உருளைக் கிழங்கினை ஃப்ரிட்ஜில் வைத்தால், அதிலிருக்கும் ஸ்டார்ச், விரைவில் சர்க்கரைச் சத்தாக மாறி, சுவையை கெடுத்துவிடுமாம்.

காபிக்கொட்டை, காபித்தூள் இரண்டையும் ஃப்ரிட்ஜில் வைத்தால் அவற்றின் சுவை மாறுவதுடன், மற்ற பொருட்களின் வாசனையையும் அது எடுத்துக்கொள்ளுமாம்.

தேனை இவ்வாறு வைத்தால், அது படிகங்களாக உறைந்துவிடும். எனவே, தேன் பாட்டிலை இறுக்கமாக மூடி அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்ததாகும்

Loading...
Categories: arokiya unavu in tamil

Leave a Reply


Sponsors