இறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை!!!, raal pepper fry recipe in tamil, tamil,samayal, kurippukal

அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக இறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை.

தேவையான பொருட்கள்: இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது), பச்சை மிளகாய் – 4, இஞ்சி – 25 கிராம், பூண்டு – 25 கிராம், வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிது, மிளகு தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும்.

பின் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, வேண்டுமானால் தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். குறிப்பாக, இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடக்கூடாது. இறால் பெப்பர் ப்ரை ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors