உடல் எடையை வேகமாக குறைக்கும் சூப்பரான பானங்கள்..! இந்த பானங்களில் ஏதாவது ஒன்றை குடியுங்கள்…!!, super weight loss juices secrets in tamil, tamil pattivaiththiyam tips

சில  பானங்களை வெறும் வயிற்றில்பருகுவதால் உடற்பருமன் அதிகம் உள்ளவர்களின் எடை குறைய வாய்ப்புள்ளதாக பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  உண்மையில் இது சாத்தியமான ஒன்றா?  ஆம் உண்மைதான் சில பானங்களைகளை நீங்கள் வெறும் வயிற்றில் எடுக்கின்ற போது அவை உங்கள் கலோரிகளை விரைந்து குறைத்து உங்கள் உடற்பருமன் குறைவதற்கும் வழிவகுக்கின்றது.

இது சாதாரணமாக நீங்கள் பருகுகின்ற லெமன் யூஸ் இல்லை. இது இளஞ்சூட்டு நீரில் தயாரிக்கப்படும் லெமன் யூஸ். நீங்கள்  உங்கள் எடையை இழக்க விரும்பினால். அதற்கு சுடுநீரைப் பயன்படுத்தலாம்.  அதுபோல லெமனிலுள்ள அமிலங்களும்  கலோரிகளை எரிக்கும் தன்மை வாய்ந்தது.  இந்த இரண்டையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் யூஸை வெறும் வயிற்றில் பருகினால் எடை குறைய அனேக வாய்ப்புக்கள் உள்ளன.

அலோ வேரா சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டுள்ளது. அது  உங்கள்  ஆரோக்கியத்தை  அதிகரிக்கும் அத்தோடு  நச்சுகளை நீக்கும் தன்மை வாயந்தது. கற்றாழை மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில முரண்பாடுகள் உள்ளன. கற்றாழையின் ஜெல்லைப் பிரித்தெடுத்து அதை நீரோடு கலந்து சாறாக்கி அந்தச் சாற்றை எலுமிச்சை யூஸோடு சேர்த்துப் பருகினால்விரைந்து உடற்பருமன் குறையும்.

கறுவா  ஒரு பிரபலமான ஸ்பைஸ் மற்றும் ஆரோக்கியம்  நிறைந்த  ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டு உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு அறிகுறிகள் உள்ளிட்ட சில அற்புதமான பக்க விளைவுகளை தோற்றுவிக்கிறது, கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களில் குறைத்தல் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை மேம்படுத்துகிறது. இதனை உடற்பருமனைக் குறைக்க வெறும் வயிற்றில் தாராளமாக பருகலாம்.
குறிப்பு-  ஒரு கப் சூடான தண்ணீரில் 120 மி.கி. கறுவா தூள் சேர்க்கவும், நன்றாக கலக்கி பின் பருகவும்

வெறும் வயிற்றில் ஒரு கப் கிறீன் டீயுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகுங்கள்.  கிறீன் டீயானது உடற்பருமனைக் குறைப்பதோடு சதை வளர்ச்சயைத் தடுக்கின்றது. அத்தோடு தேனை சேர்த்து பருகும்போது , தேன் கூடுதல் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கிறது, அது  உடலில் படிந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இஞ்சி சேர்ப்பது உடலுக்க ஆரோக்கியம் . இஞ்சி பொதுவாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சியில் அதிகளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துத் உடற் பருமன்  குறைவதற்கு வழிவகுக்கிறது. இஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. நமது தமிழ் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவது போல “காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசி நிமிர்ந்து நடப்பானே” இஞ்சியின் பலன் மிக அதிகம்.

Loading...
Categories: Weight Loss Tips in Tamil, தொப்பை குறைய

Leave a Reply


Sponsors