” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..!!, red lips beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil

உதடுகள் அழகாக இருக்கவேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும்? நம்ம முகத்திலயே கண்ணுக்கு அடுத்ததா நம்மள கவனிக்க வைக்கிறது இந்த உதடுகள் தாங்க. ஆனா நாம நம்ம உதடுகள கவனிக்கிறமா? இதுவரைக்கும் கவனிக்கலைன்னா இனிமே கவனிங்க. அதுக்கு தொடர்ந்து வாசிங்க அதையெல்லாம் செய்து பாருங்க!

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கொஞ்சம் எலுமிச்சை சாற்றுடன் சீனியைச் சேர்த்து உதட்டில் ஸ்கரப்  செய்துகொள்ளுங்கள். 10 நிமிடங்களுக்கு அதை ஊறவைத்துவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் உதட்டை கழுவிக் கொள்ளுங்கள்.உதடுகள் உலர்ந்து வெடிக்காமல் இருக்கவேண்டுமென்றால் அதிகளவான தண்ணீரைக் குடியுங்கள். தண்ணீரின் குளுமை உதடுகளை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெயில் கொஞ்சமாக ஜாதிக்காய் பொடியை சேர்த்தக் குழைத்து உதடுகளில் தடவி வந்தால் சிவந்த உதடுகளைப் பெறலாம். (நாட்டு மருந்துக் கடைகளில் ஜாதிக்காயைப் பெற்றுக் கொள்ளலாம்
தினமும் உதடுகளில் வெண்ணெய் அல்லது எண்ணெய் பூசி வந்தால் வழுவழுப்பான கவர்ந்திழுக்கின்ற உதடுகளைப் பெறலாம்.

கருமையான உதடுகள் என்று கவலையா? தினமும் கற்றாழை ஜெல்லை உதடுகளில் பூசி மறுநாள் காலை வெதுவெதுப்பான நிரில் கழுவி வாருங்கள் கருமை நீங்கி உதடுகள் பளபளக்கும்.உதட்டில் தோடம்பழச்சாறு பூசி ஊறவைத்து உதடுகளை கழுவினாலும் உதடுகளின் அழகு கூடும்.இதையெல்லாம் செய்து பாருங்க. அப்புறம் பாருங்க உங்க அழகு இன்னும் கொஞ்சம் கூடும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors