கண்புரை மற்றும் கண்பார்வை கோளாறு உட்பட பல பிரச்சனைக்கு தீர்வாகும் ஒரே உணவு..! நீங்களும் பயன்பெற்று அனைவரும் அறிய பகிருங்கள்…!!, eye care tips in tamil, kankalin pathukappu kurippukal in tamil

கரட் என்றால் பச்சையாகவே சாப்பிடக்கூடிய ஒரு மரக்கறி வகை என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த கரட்டில் சம்பல செய்யலாம், சாம்பாருக்கு போட்டு சமைக்கலாம், யூஸ் அடிச்சு குடிக்கலாம்னு தெரியும். ஆனா அந்த கரட்டில என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்குன்னு தெரியுமா?கரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

மூளை சுறுசுறுப்படையும்.!கேரட் சாறுடன் பாதாம் பருப்பை தூள் செய்து கலந்து அருந்தி வந்தால், மூளை சுறுசுறுப்படையும், ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும், மூளை பலமடையும். கேரட் மூளைச் சூட்டைத் தணித்து மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள்.!கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

கேரட் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையை நீக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.கண்களுக்கு ஆரோக்கியம் தரும். கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை பார்த்தல் நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். இதில் வைட்டமின் A சத்து உள்ளதால் கண் தொடர்பான அனைத்து நோய்களையும் போக்கும். கேரட்டில் உள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் கண் புரை நோய் வராமல் பாதுகாக்கிறது.

பல் பராமரிப்பு. கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடைவதோடு பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கேரட்டை அடிக்கடி பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். ஈறுகளும் பலப்படும்.இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

கேரட் சாப்பிட்டால், இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் பாதுகாத்து மாரடைப்பு மற்றும் இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். கேரட் இதயத் துடிப்பைச் சீராக்கும்.மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கும்.மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர, இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் மூலநோயின் தாக்கத்தையும் குறைக்கும்

Loading...
Categories: arokiya unavu in tamil, Azhagu Kurippugal

Leave a Reply


Sponsors