கர்ப்பமா இருக்கும் போது சாப்பிடவே கூடாத உணவு பொருள்கள் என்னென்ன தெரியுமா?, pregnancy healthy food tips in tamil, tamil health tips

கர்ப்பக்காலத்தில் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடகூடாது? என்று ஒரு பட்டியலே உண்டு. வாய்க்கு சுவை அளிக்கும் என்று விரும்பும் உணவு கூட அந்த நேரத்தில் உடலுக்கும் வயிற்றில் இருக்கும் கருவுக்கும் ஒவ்வாமையை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் ஒவ்வொரு வேளை உணவையும் பார்த்து பார்த்து சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். கர்ப்பக்காலத்தில் பெண் தனக்கு மட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கும் கருவுக்கும் சேர்த்து சாப்பிடுவது கட்டாயமாகிறது. அதனால் உணவை சத்துகுறையாமல் குறைபாட்டை உண்டாக்காமல் பார்த்துகொள்வது அவசியமாகிறது. என்னென்ன உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் தெரிந்துகொள்வோம்.

​எள் கலந்த உணவு

samayam tamil

முன்னோர்கள் ஆரம்ப கட்ட கருவை கலைக்க பயன்படுத்திய பொருளை கர்ப்பிணிகள் சாப்பிடுவார்களா என்று கேட்கலாம். எள் உருண்டையாக சாப்பிட்டால் தான் கரு கலையும் என்பதில்லை. எள்ளை மற்ற உணவு பொருள்களில் கலந்து சாப்பிட்டாலும் கூட ஆரம்ப கட்ட கர்ப்பத்தில் அவை ஆபத்தைதான் உண்டாக்கும்.ஏனெனில் ஒவ்வாமையை குமட்டலை தவிர்க்க சுக்கு தட்டிபோட்ட எள்ளு உருண்டையை சாப்பிடுபவர்கள் உண்டு.

எள் விதைகள் கர்ப்பப்பையின் உள் இருக்கும் கருமுட்டையை வெளியேற்றும் வகையில் கருப்பை தசையை தூண்டுகிறது. அதனால் எள் கலந்த உணவு பொருள்களை ஆறு மாதங்கள் வரையேனும் தொடாமல் இருப்பது நல்லது.

​மெர்குரி அதிகம் இருக்கும் மீன்

samayam tamil

மீன்களில் அதிக அளவு இருக்கும் பாதரசமானது வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியிலும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியிலும் குறைபாட்டை உண்டாக்கும் நரம்பியலில் நச்சை உண்டாக்ககூடியது என்பதால் இவை குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்ககூடும். அதனால் சுறா, வாள்மீன் என கடலில் வாழும் பெரிய மீன்களை தவிர்க்க வேண்டும்.

அதே நேரம் சால்மன் மீன், கெளுத்தி, கெண்டை, சிறு மீன்களை சாப்பிடலாம். வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வரை எடுத்துகொள்ளலாம்.

முட்டை

samayam tamil

புரதம், இறைச்சி மற்றும் முட்டையில் அதிகளவு நிறைந்திருப்பதால் அடிக்கடி சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் கர்ப்பத்தின் முதல் காலகட்டத்தில் எஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும் போது உண்டாகும் ஒவ்வாமை உணர்வு அதிகமாக உணவிலும் பிரதிபலிக்கும். முதல் மூன்று மாதங்களில் முட்டையை எடுத்துகொள்ளும் போது நன்றாக வேக வைத்து, பொரித்து சாப்பிடவேண்டும். ஆஃப் ஆயில், அரை வேக்காட்டில் வேகவைத்து சாப்பிடுவது வயிற்றுபோக்கு வாந்தி பிரச்சனையோடு உடலை பலவீனப்படுத்தவும் செய்யும்.

காஃபின்

samayam tamil

கர்ப்பக்காலம் முழுமையுமே கடைபிடிக்க வேண்டிய விஷயம் இது. காஃபின் நிறைந்த பானங்கள், சாக்லெட் பொருள்கள் போன்றவற்றை அவ்வபோது எடுக்கவே கூடாது. தவிர்ப்பதும் கூட நல்லதுதான்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் இவை கருச்சிதைவை ஏற்படுத்தினால் நாளடைவில் இவை வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சியில் குறைபாட்டை உண்டாக்கும். காஃபின் என்பது போதை பொருள் போன்றது. இவை தற்காலிகமாக புத்துணர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வை தந்தாலும் கூட இவை ஆரோக்கியத்தை கெடுக்க மட்டுமே செய்யும். அப்படியெனில் காஃபிக்கு மாற்றாக க்ரீன் டீ குடிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அளவோடு பரிந்துரைக்கப்படும் காபி அளவு கூட க்ரீன் டீயில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​பதப்படுத்தப்பட்ட உணவு

samayam tamil

பதப்படுத்தப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்திலும் நச்சுத்தன்மை கொண்ட பிஸ் பினால் ஏ என்னும் கெமிக்கல் அடங்கியுள்ளது. கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் கிருமிகள் இதில் தங்கிவிடவும் கூடும் என்பதால் கருவுற்ற நாள் பிரசவம் வரை இந்த வகை உணவுகளை நிச்சயம் தவிர்கக் வேண்டும்.

இவை வயிற்றில் வளரும் குழந்தையின் நாளமில்லா சுரப்பி செயல்பாட்டை சேதாரமாக்கும். இதனால் கர்ப்பக்கால பிரச்சனையோடு வேறு பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.உணவிலும் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ முதல் செயற்கை நிறமூட்டிகள் தவிர்க்க வேண்டும். அதே போன்று குளிர்பானங்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை குறைக்கவே செய்யும்.

​அலர்ஜிக்குள்ளாக்கும் உணவுகள்

samayam tamil

இவை சத்து நிறைந்த ஆரோக்கியமான பொருளாகவும் கூட இருக்கலாம். ஆனால் கருவுற்ற நாளில் நீங்கள் சாப்பிடும் போது அவை உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கினால் கூர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இரண்டாவது முறையும் அதே பொருள் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கினால் நிச்சயம் அந்த பொருளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பக்காலம் முழுமையுமே. உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் கர்ப்பக்காலத்தில் மாற்றங்கள் உண்டாகும் போது உடல் ஏற்றுகொள்ளாதவற்றை சத்துள்ளதாயிற்றே என்று மீறி மீண்டும் மீண்டும் திணிக்ககூடாது. அப்படி செய்தால் அவை வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கிவிடும் அது ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் கூட.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors