பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா? அப்ப தினமும் செய்யுங்க…, pimple mark removing beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil

பருக்கள் என்பது எல்லாருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனை தான். பருக்கள் முகத்தில் ஏற்படும் எண்ணெய், அதிகபட்ச தூசி மற்றும் ஹார்மோன்களின் மாற்றம் போன்றவற்றினால் ஏற்படும். அத்துடன் சிலருக்கு பருக்கள் தானாக வந்து தானாகவே சரி ஆகிவிடும் மற்றும் சிலருக்கு பருக்கள் வந்த இடத்தில் தழும்பாக மாறி சிறிய துளைகள் ஏற்பட்டு முகத்தின் அழகையே கெடுத்து விடும்.

இந்த துளைகள் சருமத்திற்கு நடுப்பகுதியில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றத்தினால் ஏற்படும் ஒன்றாகும். சருமத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் இந்த மாற்றம் மனச்சோர்வு அல்லது முகத் துளைகளை ஏற்படுத்தும். இவை அட்ரோபிக் முகப்பரு வடுக்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

முகப்பரு வடுக்கள்

உங்களுக்குச் சிறிய அளவில் பருக்கள் ஏற்பட்டால் அவற்றை மிகக் குறுகிய காலத்திற்குள் சரி செய்து விடலாம். ஆனால் பருக்கள் மறைந்த பிறகு அந்த இடத்தில் தழும்புகளை விட்டுச் சென்று துளைகள் ஏற்பட்டால் அவற்றைச் சரி செய்யச் சற்று நாட்கள் ஆகும். எனவே நீங்கள் சற்றுநேரம் செலவழித்து உங்கள் முகத்துளைக்களுக்கு வீட்டுலையே சிகிச்சை அளிக்கலாம்.

இயற்கையான வழிகள்

முகப்பரு துளைகளை நீக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதாவது சந்தைகளில் முகப்பரு துளைகளை நீக்குவதற்கு ஏராளமான இரசாயனங்கள் கலந்த விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் உங்களுக்கு உடனடி தீர்வு கிடைத்தாலும் அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மேலும் மறுபடியும் சருமத்தில் துளைகள் ஏற்படுவதற்கு வழிகள் உண்டு. எனவே நீங்கள் இயற்கையான வழியில் சென்று முகப்பரு துளைகளை அகற்றுவதே சிறந்தது. ஏனெனில் முகப்பரு துளைகள் சருமத்தில் இயற்கையான குறைபாட்டினால் ஏற்பட்ட ஒன்றாகும். எனவே அதனை இயற்கையான வழியில் சென்று சரி செய்வதே நல்லது.

ஆன்டி-பாக்டீரியால் சோப்பு

முகத்திற்கு ஏதேனும் சிகிச்சை அளிக்க தொடங்கும் முன்பு உங்கள் முகங்களை ஆன்டி-பாக்டீரியால் சோப்பினை கொண்டு சுத்தமாக கழுவுங்கள். பின்பு சருமத்துளைகளின் மேல் எஸ்போலிட் அதாவது காபி பவுடர், ஓட்ஸ், உப்பு அல்லது சர்க்கரை இவற்றுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை எழுப்புங்கள்.

எலுமிச்சை இலைகள்

மஞ்சள் தூள் மற்றும் 6 எலுமிச்சை இலைகள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட் போல் எடுத்து முகத்தில் துளைகள் உள்ள இடங்களில் தேயுங்கள். அரை மணி நேரம் சென்ற பின்பு வெதுவெதுப்பான நீரில் முகங்களை கழுவுங்கள். இந்த முறையைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் தினமும் செய்து வாருங்கள். நீங்களே மாற்றத்தை உணருவீர்கள்.

 

தயிர்

சிறிதளவு தயிர் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு இரண்டையும் நன்றாகக் கலந்து சருமத்தில் துளைகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் ஒருமுறை செய்யலாம்.

தேன்

தேன் ஆன்டி பாக்டீரியல் பண்பினை கொண்டுள்ளதால் சருமத்தில் இருக்கும் துளைகளைச் சரி செய்யும். எனவே நீங்கள் தேனை எடுத்து சருமத்தில் துளைகள் இருக்கும் இடத்தில் நேரடியாக அப்ளை செய்யலாம்.

பேஸ்ட்

தயிர், உருளைக்கிழங்கு, தேன் மற்றும் கடலை மாவு எல்லவற்றையும் ஒன்றாகக் கலந்து சருமத்தில் துளைகள் இருக்கும் இடத்தில் தடவலாம். இந்த முறையும் உங்கள் சரும துளைகள் விரைவில் மறைய மிகச் சிறந்த ஒன்றாக உதவும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors