மசாலா / பருப்பு வடை, masal paruppu vadai recipe in tamil, tamil samayal kuriipukal in tamil

கட்லே பேலே அம்போட் என்பது கர்நாடகாவின் ரெசிபி ஆகும். இது மசாலா வடை, தால் வடை அல்லது பருப்பு வடை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு சிற்றுண்டி ஆகும். மேலும் இது தசரா போன்ற பண்டிகை காலங்களில் வீட்டில் செய்யப்படுகிறது. இந்த ரெசிபி பொதுவாக கடலை பருப்பு மற்றும் பிற மசாலாப் பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. கர்நாடகாவின் எந்தவொரு பண்டிகை காலங்களிலும் இந்த சுவையான வடை தயாரிக்கப்படுகிறது.இந்த மிருதுவான மற்றும் மொறு மொறுப்பான வடை, முழு பயறு மற்றும் சில மசாலாப் பொருட்களின் நறுமணத்துடன் தயாரிக்கப்படுகிறது. எனவே நீங்களும் உங்கள் வீட்டில் வருகின்ற தசரா பண்டிகையின் போது, இந்த சுவை மிக்க பருப்பு வடையை செய்து அசத்துங்கள். இந்த சுவையான மசாலா வடையை செய்வது எப்படி என்ற வழிமுறையை இப்பொழுது காணலாம் வாருங்கள்.

 

(Serving: 4)

முக்கிய பொருட்கள்

  • 1 கப் இரவு ஊறவைத்த கடலை பருப்பு

பிரதான உணவு

  • 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு மஞ்சள்
  • தேவையான அளவு நறுக்கிய கறிவேப்பிலை
  • தேவையான அளவு நறுக்கிய புதினா இலை
  • தேவையான அளவு நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 inch துருவிய இஞ்சி
  • தேவையான அளவு உப்பு

How to make: மசாலா / பருப்பு வடை

Step 1:ஒரு மிக்சியில் ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் பொழுது பருப்பை முற்றிலுமாக அரைக்காமல், கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

samayam tamil

Step 2:பின்பு அரைத்து வைத்துள்ள கலவையில் கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், துருவிய இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

samayam tamil

Step 3:ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில், வடை மாவை தட்டி எண்ணையில் போடவும். வடை பொன்னிறமாக மாறும் வரை இரண்டில் இருந்து மூன்று நிமிடம் வரை நன்றாக சமைத்து எடுக்கவும்.

samayam tamil

Step 4:சுட்டு எடுத்த வடையை சூடாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி மகிழவும். சூடாக சாப்பிடும் போது வடை இன்னும் ருசியாக இருக்கும். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து வடையை பரிமாறலாம்.

samayam tamil
Loading...
Categories: Vadai Recipe In tamil

Leave a Reply


Sponsors