கருப்பட்டி மைசூர்ப்பாகு எப்படி செய்வது, tasty maysoor paku seivathu eppadi in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள்

கடலை மாவு – ஒரு கப்

கருப்பட்டி (பனை வெல்லம்)

– ஒரு கப் (பொடிக்கவும்)

நெய் – கால் கப்

எண்ணெய் – ஒரு கப்

சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்

புதுமை + இனிமை ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அது உருகியதும், கடலை மாவைச் சேர்த்து, மணம் வரும் வரை நிறத்தை மாற்றாமல் நடுத்தர தீயில் வறுக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும். வறுத்த கடலை மாவில் ஒரு கப் எண்ணெயை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். இதைத் தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீருடன் கருப்பட்டி சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அது கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு அசுத்தங்களை அகற்ற அதை வடிகட்டி, சுக்குத்தூளைச் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை மீண்டும் கொதிக்கவைக்கவும்.

தீயைக் குறைத்து வைத்து, கடலை மாவு கலவையைச் சேர்த்து, கட்டிகளைத் தவிர்க்க தொடர்ந்து கிளறவும். அது கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து வாணலியின் பக்கங்களைவிட்டு வெளியேறும் வரை கிளறவும். இது ஒன்றாக வரத் தொடங்கும்போது, அடுப்பில் இருந்து அகற்றி, கலவையை ஒரு நெய் தடவப்பட்ட தட்டில் மாற்றவும். சிறிது ஆறியதும் கத்தியைப் பயன்படுத்தி விரும்பிய வடிவங்களில் வெட்டவும். அது முழுமையாகக் குளிர்ந்த பிறகு, துண்டுகளைப் பிரிக்கவும்.

சுவையான, ஆரோக்கியமான கருப்பட்டி மைசூர்ப்பாகு தயார்.

* காபியில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்துப் பருகினால் நம் உடலுக்குச் சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

Loading...
Categories: இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors