சூப்பர் டிப்ஸ்! மைசூர் மசாலா தோசை செய்ய ஈசியான வழி !!ட்ரை பண்ணி பாருங்க !!, easy mysoor masala thosai recipe in tamil, tamil, samayal kurippukal in tamil, cooking tips in tamil

செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனைக் கழுவி, நன்கு மென்மையாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்க விடவும். மிளகாய் சட்னிக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, நன்கு பேஸ்ட் போல் அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, ப.மிளகாயை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி குளிர வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் மாவை ஊற்றி மெல்லிய தோசைப் போன்று சுற்றி, 1 நிமிடம் கழித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் பரப்பி (தோசை முழுவதும் படும்படி), நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, சுற்றி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மெதுவாக, தோசையின் ஒரு பக்கமாக மடித்து, தட்டில் எடுத்து வைத்து பரிமாற வேண்டும்.இப்போது சூப்பரான மைசூர் தோசை ரெடி.

Loading...
Categories: Dosai recipes in tamil

Leave a Reply


Sponsors