சூப்பர் டிப்ஸ்!குழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க!!!, child healthy foods in tamil, kulanthai aarokkiya unavukal in tamil

பூண்டை சுவை மிகுந்த வகையில் உண்ண சிறந்த வழி இந்த பூண்டு பால் தான். இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அவை யாவை என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

1. சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் பூண்டு பாலை எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

2. முகப்பருவில் இருந்து விடுபட வெளியே தடவப்படும் மருந்துகளுக்கு இணையான பலன் பூண்டு பால் குடிப்பதனால் கிடைக்கும். தொடர்ந்து பூண்டு பாலை குடித்து வந்தால் முகப்பருவில் இருந்து விடுதலை பெறலாம்.

3. பாலூட்டும் தாய்மார்கள் பூண்டு பாலை பருகி வந்தால் குழந்தைக்கு தேவையான பால் சுரக்கும்.

4. நிமோனியாவால் அவதிப்படுபவர்கள் பூண்டு பால் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைவார்கள்.

மேலும் இது சுவை மிகுந்த ஒன்று என்பதனால் இதனை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

5. உடலில் ஏற்படும் செரிமான கோளாறுகளை சரி செய்ய வல்லது இந்த பூண்டு பால்.

6. குடலில் இருக்கும் பூச்சிகளை கொல்ல பூண்டு பாலே சிறந்த மருந்து. காலை எழுந்தவுடன் பூண்டு பாலை குடித்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.

இப்போது பூண்டு பால் எப்படி செய்வதென பார்க்கலாம்.

 

பூண்டு பால் செய்ய

தேவையான பொருட்கள்:

பால்- ஒரு கப்

பூண்டு- 10 பல்

மிளகு தூள்- 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

பனங்கற்கண்டை- 1 தேக்கரண்டி

பூண்டு பால் செய்யும் முறை:

■பாலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து காய வையுங்கள்.

■பால் காயும் முன்பே 10 பல் பூண்டின் தோலை உறித்து அதனை பாலில் சேர்க்கவும்.

■பூண்டு வேகும் வரை பால் நன்றாக கொதிக்கட்டும்.

■பூண்டு வெந்த பிறகு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

■பச்சை வாசனை போன பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு மத்தை கொண்டு நன்றாக பூண்டினை நசுக்கி விடவும்.

■அவ்வளவு தான் பூண்டு பால் தயாராகி விட்டது.

Loading...
Categories: kulanthai unavugal in tamil

Leave a Reply


Sponsors