திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையா? அப்ப இந்த முறையை டிரை பண்ணுங்க ,Infertility | pregnancy problem tamil tips | Women Health tamil tips | மலட்டுத்தன்மை

தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது. திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே, குழந்தை இல்லையே என கவலைப்பட தேவை இல்லை.

அவ்வாறு இருந்தால், மருத்துவரிடம் சென்று இருவரும் தங்களது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மனதில் எந்த கவலையும் வைத்துக் கொள்ளாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்தது ஆகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொஞ்ச நாட்களுக்கு இறைச்சியை தவிர்ப்பது நல்லதாகும். மீன், முட்டை, கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு போதும் புகை, மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. ஆண்கள் தினசரி இரண்டு வேளை உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்ததாகும். அதுவும் குறிப்பாக, அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தானிய வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிக நேரம் உறங்குவது சிறந்ததாகும். மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors