இறால் கிரேவி(prawn fish gravy)

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்         –     100 கிராம்

தக்காளி                   –     1

இறால்                    –     15

பச்சை மிளகாய்            –     1

இஞ்சி பூண்டு விழுது      –     1ஸ்பூன்

மஞ்சள் தூள்              –     சிறிது

தேங்காய்                 –     1ஸ்பூன்

மிளகாய் தூள்             –     1ஸ்பூன்

பூண்டு                    –     6பல்

உப்புஎண்ணெய்          –     தேவைக்கு

செய்முறை:

* சின்ன வெங்காயம், தக்காளி, இறாலை நறுக்கி தனியாக வைக்கவும் கடாயில் எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்

* நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, மஞ்சள்த்தூள், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

* பிறகு மிளகாய்த்தூள், தக்காளி, உப்பு  சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்

* நன்றாக கொதி வரும் பொழுது இறால்,,தேங்காய் பூ, தட்டிய பூண்டு போட்டு 5 -8 நிமிடம் வேக வைக்கவும்.

* நன்றாக வதங்கிய பிறகு இறக்கவும். சூடான பருப்பு, சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம்

Loading...
Categories: raal recipes in tamil

Leave a Reply


Sponsors