உண்மையில் அங்கே என்ன நடந்தது : ஏன் மாலை 3 மணிக்கு குளிக்கச் செல்லவேண்டும் ?

இலங்கை நெடுங்கேணியை சேர்ந்த 35 வயதாகும் சுதா என்ற பெண், முல்லைத்தீவு கள்ளப்பாட்டைச் சேர்ந்த சிவானந்தம் (சுகந்தன்) என்பவரை திருமணம் முடித்து லண்டனில் உள்ள மிச்சம் பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில். இவர்களுக்கு சுடர்ணன்(10) மற்றும் சாயகி(05) என்ற 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். நேற்று முன் தினம்(30) அன்று மதியம் 3 மணி அளவில், மகன் சுடர்ணன் குளிக்கச் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு வந்து பார்கையில், அம்மா ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சுடர்ணன், தனது பிளட்டின் கதவை திறந்து முன் வீட்டில் உள்ள நபர்களின் கதவை தட்டி உதவி கோரியுள்ளான். இதனை அடுத்து வீட்டுக்கு உள்ளே வந்த அயலவர்கள் உடனடியாக 999 க்கு அழைப்பை விடுத்துள்ளார்கள். 5 வயது நிரம்பிய சாயகியும் ரத்த வெள்ளத்தில் கிடந்த காரணத்தால், அம்பூலன்ஸ் சேவைப் பிரிவினர் தாமாகவே செயல்பட்டு, ஏர் அம்பூலன்ஸ் உதவியை நாடி உள்ளார்கள்.

குறிப்பாக லண்டனில் சிறுவர்கள் இதுபோன்ற கத்திக் குத்துக்கு ஆளாகினால், அருகில் ஹெலி இறங்க இடம் வசதியாக இருந்தால். ஏர் அம்பூலன்ஸை அனுப்புவது வழக்கம். இன் நிலையில் தான் அருகில் இருந் கார் பார்கில் ஹெலி வந்து இறங்கியது. பொலிசாரும் விரைந்து வந்த நிலையில் தான். கணவருக்கு செய்தி அனுப்பப்பட்டது. இதே வேளை மருத்துவ பயிற்ச்சி பெற்ற அயலவர் ஒருவர் தெரிவிக்கையில். நான் வீட்டிற்கு உள்ளே சென்றவேளை, கட்டில் எங்கும் ரத்தம் இருந்தது. அவர்களது மகள் ரத்த வெள்ளத்தில் இருந்தார். அவர் பிழைக்க மாட்டார் அல்லது உயிரிழந்து விட்டார் என்று என்னால் உணர முடிந்தது என்கிறார்.

அப் பகுதியில் உள்ள தமிழ்க் கடை ஒன்றின் உரிமையாளர் பத்மநாதன் அரியரட்னம் தெரிவிக்கையில், மிகவும் அற்புதமான குடும்பம். அடிக்கடி கடைக்கு வருவார்கள். ஆனால் அந்த குறித்த தாய் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும். அவர் ஆயுர்வேத வைத்தியத்தை (மூலிகை சிகிச்சை) நாடியதாகவும் தெரிவித்திருந்தார். இதேவேளை தமிழ் பாடசாலைக்கு செல்லும் இவர்களை கூட்டிச் சென்ற சுதா சில வேளைகளில் தனக்கு தானே பேசிக் கொண்டு இருப்பதை, அங்கே வேலை செய்த ஆசிரியை ஒருவர் உறுதி செய்துள்ளார்.

தனக்கு புற்று நோய் இருப்பதாகவும், வேறு சில உடல்நலக் குறைவு இருப்பதாகவும் சுதா அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில். தான் இறந்தால் தனது மகளை கவனமாக பார்க்கும் படி அடிக்கடி உறவினர்களுக்கு கூறியதோடு. தான் இறந்தால் தான் அவளையும் கூட்டிச் செல்வேன் என்றும் கூறி வந்துள்ளார். வழமையாக கணவர் செயின்ஸ் பெரியில் இருந்து , வேலை முடித்து 5 மணிக்கே வீடு திரும்புவார். மேலும் அவரது மகன் சுடர்ணன், வழமையாக 4 மணிக்கே குளிக்கச் செல்வது வழக்கம். ஆனால் சம்பவ தினம் அன்று, 3 மணிக்கே குளிக்கச் செல்லுமாறு சுதா அவரை வற்புறுத்தியுள்ளார்.

இது ஒன்று மட்டுமே சந்தேகங்களை கிளப்பி வருகிறது. அவர் தன்னையும் பிள்ளையையும் மாய்த்துக் கொள்வது என்று ஏற்கனவே மனதுக்குள் நினைத்து, இருந்திருக்க வேண்டும். கத்தியால் குத்திக் கொலை செய்வது என்ற, எண்ணம் சுதாவுக்கு எங்கே இருந்து வந்தது என்ற அடுத்த வேள்வி எழுகிறது அல்லவா ?

சமீபத்தில் நடந்த இரட்டைக் கொலையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். எங்களுக்கு இவை புலப்படுவது இல்லை. ஆனால் இது ஒரு சங்கிலித் தொடர் போன்றதுதான் இது.  மன அழுத்தத்தில் உள்ளவர்கள், பிறருக்கு நடந்த விடையங்கள் தமக்கு நடப்பது போல கற்பனை செய்வது வழக்கம். சுதா ஏற்கனவே நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக அறிந்திருந்தாரா என்பது ஒரு சந்தேகம் தான்.  எது எவ்வாறு இருப்பினும், நாட்டு பற்று மிக்க ஒரு நல்ல பெண் குழந்தையை இந்த தமிழ் சமுதாயம் இழந்து நிற்கிறது.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors