ஜோதிட சிறுவன் அபிக்யாவின் ஜோதிடம் பழித்தது..! அடுத்த அழிவு ஆரம்பம்…!!

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இது வரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இதனை கட்டுப் படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்து இன்று உலகில் சுமார் 200க்கு மேட்பட்ட நாடுகளை ஆக்ரமித்தது.

ஆனால் சில மாதங்களிலேயே சீனாவில் கொரோனா கட்டுப் பட்டுக்குள் வந்தது. இதனால் பல நாடுகள் சீனா தான் இதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என கூறி வருகிறது. இதன் போது இந்தியாவின் ஜோதிட சிறுவனான அபிக்யா சீனாவில் கொரோனா தொற்று தற்போது முடிந்திருந்தாலும் வேறு தொற்று நோய் ஆபத்து ஏற்படும், இதுவும் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. G4 EA H1N1 என்ற ஒருவித வைரஸ் பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுவது கண்டறியப் பட்டுள்ளது. இது 2009ம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட A/H1N1Pgm09 என பெயரிடப் பட்ட பன்றிக் காய்ச்சலை போன்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

என்ன தான் ஒரே மாதிரியான வைரஸாக இருந்தாலும் இந்த வைரஸினால் சுவாசக் குழாயில் பிரச்சனைகள் ஏற்படுத்தும் அதாவது மூக்கில் இருந்து நுரையீரல் பகுதி வரை இந்த புதிய வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப் படுகின்றது. இந்த வைரஸ் குறித்து பேசியுள்ள இலங்கை தொற்று நோயியல் பிரிவு தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கருத்து தெரிவிக்கையில்…

 

இந்த வைரஸ் சீனாவில் பன்றி பண்ணைகளில் பணி புரியும் பலருக்கு தொற்றியுள்ளது. இது தொற்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக. இது வரை எமது நாடுகளில் இல்லாததால் அவதானமில்லாமல் இருக்க வேண்டாம். சில வேலைகளில் இந்த காய்ச்சல் தொற்று நோயாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார்..!

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors