தன்னை தானே கத்தியால் பலமாக குதிய அம்மாவுக்கு 2வது ஆப்பரேஷன் நடக்கவுள்ளது.

நேற்று(30) லண்டன் மிச்சத்தில் நடந்த கத்திக்கு சம்பவத்தில், 35 வயது தாயார் ஒருவர் தனது 5 வயது மகளான சாயகியை குத்திக் கொலை செய்துள்ள  நிலையில். தன்னையும் அவர்  பலமாக கத்தியால் குத்தியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதனால் நேற்றைய தினம் 5 மணி நேர ஆப்பரேஷன் ஒன்று அவருக்கு செய்யப்பட்டுள்ள போதும். அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாளை(2) மேலும் ஒரு சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டால் மாத்திரமே, அவர் பிழைப்பாரா இல்லையா என்பதனை உறுதியாக சொல்ல முடியும் என வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் சமூக வலையத்தளங்களில், இந்த அம்மா எப்படி பெற்ற பிள்ளையை கொலை செய்வார் என்று பலர், எழுதி திட்டி வருகிறார்கள். இது முறை அல்ல. நீண்ட நாட்களாக அவருக்கு இருந்த மன அழுத்த வியாதியை எவருமே குணப்படுத்தவும் இல்லை. அவர்களே குற்றவாளிகள் ஆவார்.

குறித்த அம்மா தமிழ் பாடசாலைக்கு சாயகியை கூட்டி வருவார் என்றும். ஆனால் தனக்கு தானே ஏதோ பேசிக் கொண்டு இருப்பார் என்றும் தமிழ் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவரது மன நிலை கெட்டு விட்டால், அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியாது. உண்மையில் சொல்லப் போனால் அவர்களை பொறுத்தவரை இது கொலையே கிடையாது. நாம் ஏன் மற்றவர்கள் மன நிலையில் இருந்து சிந்திக்க தவறுகிறோம். எந்த அளவு துன்பத்தை அவர் அனுபவித்தாரோ தெரியவில்லை. மன நிலை சரியில்லாத பலரை , நான் பார்த்து பேசி இருக்கிறேன். காதில் ஏதோ சத்தம் கேட்க்கிறது. ஒரு குரல் வந்து இதனைச் செய் … அந்த விடையத்தை செய்…. என்று என்னிடம் சொன்னது என்று சொல்ல்வார்கள்.

இது தான் மன நிலை பாதிப்பின் முதல் கட்டம் ஆகும். நாளாக… நாளாக இது முற்றிக் கொண்டு போகும். ஆனால் இதற்கு சரியாம மருத்துவ சிகிச்சை உண்டு. எனினும் தமிழர்கள் கொண்டு செல்ல மாட்டார்கள். ஏன் என்றால் ஒரு தயக்கம். இல்லையென்றால் பிரஸ்டீஜ் பிரச்சனை. ஆங்கிலம் தெரியாது. கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வது. இப்படி பல பிரச்சனைகள் தமிழர்கள் மத்தியில் உண்டு. ஆண்கள் வேலைக்கு செல்ல பெண்கள் வீட்டில் இருப்பது. கார்டன்(Garden) என்று சொல்லப்படும் பின் வீட்டு பூங்கா கூட இல்லாமல், பிளாட்டில்Flat (தொடர்மாடியில்) 10 அடிக்கு 10 அடி ரூமில் இருப்பது. சரியான TV வசதிகள் கூட இல்லை.

இப்படி ஒரு நிலையில் இருந்தால் யாருக்கு தான் பைத்தியம் பிடிக்காது ?  இன்று இந்த தாயை குறை கூறும் நீங்கள், உங்கள் அக்கா தங்கச்சி இப்படி செய்தால் என்ன செய்வீர்கள் ? குறை கூறியே நாம் பழகிவிட்டோம். எந்த ஒரு தாயும் தான் பெற்ற செல்வங்களை கொலை செய்ய கனவிலும் நினைக்க மாட்டார். அது நடக்கிறது என்றால் ஒரே காரணம் தான் இருக்க முடியும். அது மன நிலை சரியில்லாமல் தான். தமிழர்கள் மத்தியில் இன்று பலர் இவ்வாறு இருக்கிறார்கள். எந்த ஒரு மருத்துவமும் எடுக்காமல் உள்ளார்கள்.. நாளை இப்படி வேறு ஒரு இடத்தில் நடக்கலாம். அது உங்கள் வீடாகவும் இருக்கலாம்.

எனவே குறை கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, சமூக அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள். இவர்களை போன்ற மன நோயாளிகளைக் கண்டால் அன்பாக பழகுங்கள். ஆதரவு கரம் நீட்டுங்கள். மருத்துவரிடம் போகச் சொல்லி, அவரது உறவினர்களிடம் சொல்லுங்கள். முடிந்தால் நீங்களே கூட்டிச் செல்லுங்கள். இது எமது தமிழ் சமூகம். நாம் தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஈரான் நாட்டு காரன் வந்து உதவி செய்யப் போவது இல்லை.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors