தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்! துடிதுடித்த சிறுமி!

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது நிரம்பிய மாதேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், மாதேசை கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ், மாணவியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடையில் எண்ணெய் வாங்கிய மாதேஷ், மாணவியின் வீட்டு ஜன்னல் அருகே ஒரு பாத்திரத்தில் வைத்து காய்ச்சி சூடாக்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் உறங்கி கொண்டிருந்த மாணவியின் மீது ஜன்னல் வழியாக கொதித்த எண்ணையை ஊற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். கொதித்த எண்ணை சிறுமியின் கை , கால்களில் பட்டு தீக்காயம் ஏற்பட்டு சிறுமி துடிதுடித்துள்ளார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். இதனையடுத்து தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors